AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ரெனோ 16 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

Oppo Reno 16 Series Smartphones Soon To Launch In India | ஓப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ரெனோ 16 சீரீஸ்.. சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 22 Jun 2026 23:33 PM IST

இந்தியாவில் உள்ள பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள நிறுவனம் தான் ஓப்போ (Oppo). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனான ஒப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை (Oppo Reno 16 Series Smartphones) இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், ஓப்போ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள இந்த ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமாகும் ஓப்போ ரெனோ 16 சீரீஸ்

ஓப்போ நிறுவனம் தனது ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த சீரீஸில் ஓப்போ ரெனோ 16 மற்றும் ஓப்போ ரெனோ 16 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் இடம்பெறும். இந்த ஓப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் 1.5 AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டு இருக்கும். இதுவே ஒப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போன் 6.32 இன்ச் 1.5K OLED டிஸ்பிளே அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதையும் படிங்க : போன்பே பயன்படுத்தவில்லையா? ரூ.100 கட்டணம்… தவிர்ப்பது எப்படி?

இந்த ஓப்போ ரெபோ ஃப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 9500s பிராசசர் அம்சத்தை கொண்டு இருக்கும். இதுவே ஒப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போன் டைமன்சிட்டி 8550 சூப்பர் பிராசசர் அம்சத்தை கொண்டு இருக்கும். இந்த ஸ்மார்ட்போன்களில் 50 மெகாபிசல் அல்ட்ரா வைட் மற்றும் 50 மெகாபிக்சல் ஹூட்டர் கேமரா அம்சங்களை கொண்டு இருக்கும்.

7,000 mAh பேட்டரி அம்சத்துடன் அறிமுகமாக உள்ள ஸ்மார்ட்போன்கள்

இந்த ஓப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் 7,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டு இருக்கும் என்றும், ஓப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போன் 6,700 mAh பேட்டரி அம்சத்தை கொண்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us