போன்பே பயன்படுத்தவில்லையா? ரூ.100 கட்டணம்… தவிர்ப்பது எப்படி?
யுபிஐ மூலம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்துபவர்கள் தான் அதிகம், பலரும் போன்பேயின் வாலெட் வசதியை அதிகம் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் போன்பேயின் பராமரிப்பு கட்டணம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயலிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்று போன்பே (PhonePe) நிறுவனம் தங்களது வாலெட் பயன்பாட்டு விதிமுறைகளில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு வருடத்திற்கு போன்பே வாலட்டை பயன்படுத்தாமல் வைத்திரு்தால் பயனர்களிடம் ரூ.100 வரை பராமரிப்புக் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக யுபிஐ மூலம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்துபவர்கள், போன்பேயின் வாலெட் வசதியை அதிகம் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் போன்பேயின் பராமரிப்பு கட்டணம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர்.
போன்பேயின் புதிய கட்டண முறை
போன்பே புதிய நிறுவனம் புதிய கொள்கை மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி போன்பே வாலட்டை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 365 நாட்கள் எந்தவித பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளவில்லை என்றால், அந்த வாலெட் செயலில் இல்லை என வகைப்படுத்தப்படும். அதன் பிறகு வாலட்டில் உள்ள தொகயில் இருந்து ரூ.100 பராமரிப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக போன்பே செயலியில் வழக்கமாக யுபிஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வது மட்டும் போதாது. வாலட்டில் நேரடியா பணப்பரிவர்த்தனை நடந்திருக்க வேண்டும்.
இதையும் படிக்க : உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதா? உடனே இதை பண்ணுங்க !




கட்டணத்தை எப்படி தவிர்க்கலாம்?
போன்பே வாலட்டில் செயல்பாட்டில் வைத்திருக்க ஆண்டுக்கு குறைப்பட்சம், வாலட்டில் பணம் வைத்திருப்பது, வாலட்டில் உள்ள பணத்தை பயன்படுத்தி பணம் செலுத்துதல், அல்லது மொபைல் ரீசார்ஜ், மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு வாலட்டில் இருந்து பணம் அனுப்பவது என ஒருமுறையாவது பயன்படுத்த வேண்டும். இது ஒவ்வொரு 365 நாட்களுக்கும் ஒருமுறையும் மாறும்.
இதையும் படிக்க : புது படம்.. கேள்வித்தாள் லீக்.. டெலிகிராமில் ஏன் குற்றம் நடக்கிறது தெரியுமா?
போன்பே வாலட்டை ஒரு வருடம் முழுமையாக பயன்படுத்தாமல் இருந்தால் உடனடியாக பிடித்தம் செய்யப்படாது. பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் முன் போன்பே நிறுவனம் 15 நாட்களுக்கு முன் இது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை அனுப்பும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதே போல வாலட்டில் ரூ.100க்கு மேல் பணம் இருந்தால் ரூ.100 மட்டும் எடுக்கப்படும், ரூ.100க்கும் குறைவாக இருந்தால், எவ்வளவு பணம் உள்ளதோ அந்த அளவுக்கு மட்டும் பணம் எடுத்துக்கொள்ளப்படும். ஆனால் எந்த நேரத்திலும் பயனர்களின் வாலட் நெகட்டிவ் நிலைக்கு செல்லாது.
யுபிஐ மூலம் நேரடியாக வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்துபவர்கள் தான் அதிகம், பலரும் போன்பேயின் வாலெட் வசதியை அதிகம் பயன்படுத்துவதில்லை. இந்த நிலையில் போன்பேயின் பராமரிப்பு கட்டணம் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இது தங்களுக்கு தேவையில்லாத சுமையை அதிகரிப்பதாக பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.