உங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டதா? உடனே இதை பண்ணுங்க !
WhatsApp Hack Alert: தற்போது சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப்பை குறி வைத்து பல மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நமது சிறிய கவனக்குறைவு வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய வழிவகுக்கும் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர். அதனை எப்படி தவிர்ப்பது என பார்க்கலாம்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே வாட்ஸ்அப் மாறிவிட்டது. தங்களது குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் தொடர்புகொள்ளவும், அலுவலக பணிகளுக்கும் வாட்ஸ்அப் மிக இன்றியமைதாததாக மாறிவிட்டது. பல முக்கிய ஆவணங்கள் மற்றும் தொடர்புகளையும் வாட்ஸ்அப் வாயிலாக மேற்கொண்டு வருகிறோம். இந்த நிலைில் தற்போது சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப்பை குறி வைத்து பல மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நமது சிறிய கவனக்குறைவு வாட்ஸ்அப்பை ஹேக் செய்ய வழிவகுக்கும் என டெல்லி காவல்துறையின் ஐஎஃப்எஸ்ஓ பிரிவின் காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
எப்படி நடக்கிறது வாட்ஸ்அப் மோசடி?
சமீப காலமாக சைபர் குற்றவாளிகள் மின்சார வாரியம், குடிநீர் வாரியம் வங்கி அல்லது அரசு அதிகாரிகள் என மக்களிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக பில் அப்டேட், கேஒய்சி சரிபார்ப்பு போன்ற காரணங்களைக் காட்டி மக்களை பயமுறுத்தி ஏபிகே ஃபைல்கள் அல்லது சந்தேகத்துக்குரிய இணையதள இணைப்பை அனுப்புகின்றனர். பயனர்கள் அந்த ஏபிகே ஃபைல்களை டவுன்லோடு செய்வது இன்ஸ்டால் செய்வதால் மோசடி கும்பலுக்கு மொபைலில் பல்வேறு அனுமதிகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிக்க : எரிபொருள் சிக்கனத்தை அளிக்கும் கூகுள் மேப்ஸின் புதிய அம்சம் – எப்படி பயன்படுத்துவது?




இப்படி செய்வதன் மூலம் ஹேக்கர்கள் செல்போன் அழைப்புகள், மெசேஜ், ஓடிபி, கால் மற்றும் மெசேஜ் ஃபார்வேர்டிங் வசதி போன்ற அனைத்தும் ஹேக்கர்களின் கைகளுக்கு சென்றுவிடும். பின்னர் உங்கள் மொபைல் எண்ணை பயன்படுத்தி தங்களது போனின் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி உங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு பணம் கேட்டு மெசேஜ் அனுப்புவார்கள்.
பின்னர் அவர்கள் உங்கள் மொபைல் எண்ணைப் பயன்படுத்தி தங்களது சாதனத்தில் வாட்ஸ்அப்பை இயக்கி, உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பணம் கேட்டு செய்தி அனுப்புவார்கள். ஒருவேளை சந்தேகமடையும் உங்கள் நண்பர் உங்களுக்கு கால் செய்ய முயன்றால் அந்த அழைப்பு உங்களுக்கு வராது. கால் ஃபார்வேர்டு செய்யப்பட்டிருக்கும் என்பதால் அந்த கால் ஹேக்கர்களுக்கு செல்லும். இதனால் உண்மையில் நீங்கள் ஆபத்தில் இருப்பதாக நினைத்து பலர் பணம் அனுப்பி ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதையும் படிக்க : ஹேக் செய்யப்பட்ட 20,00க்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகள் – மெட்டா வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி
வாட்ஸ்அப் ஹேக் ஆனாதாக சந்தேகம் இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
- சந்தேகத்துக்குரிய வகையில் ஏபிகே ஃபைல்களை அல்லது லிங்க்குகளை கிளிக் செய்துவிட்டதா நீங்கள் நினைத்தால், உங்கள் போனில் ##21# என்ற டயல் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் போனில் கால் ஃபார்வேர்டிங் செய்யப்பட்டிருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள முடியும். அப்படி சந்தேகத்துக்குரிய வகையில் உங்கள் கால் மற்றும் எஸ்எம்எஸ் ஃபார்வேர்டிங் செய்யப்பட்டிருந்தால் அதனை உடனடியாக நிறுத்த வேண்டும்.
- சந்தேகத்துக்குரிய ஏபிகே ஃபைல்கள் உங்களுக்கு வந்தால் அவற்றை சைபர் கிரைம் காவல்துறையிருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் ஹேக்கர்களை காவல்துறையினரால் உடனடியாக கண்டறிய உதவியாக இருக்கும்.
- வாட்ஸ்அப்பில் Two Factor Authentication (2FA) என்ற பாதுகாப்பு அம்சத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என போலீசார் அறிவுறுத்துகின்றனர். இதன் மூலம் ஓடிபி கிடைத்தாலும் PIN இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை எளிதில் பயன்படுத்த முடியாது.
- சந்தேகத்துக்குரிய எண்ணில் இருந்து கால் வந்தாலோ அல்லது ஏபிகே ஃபைல்கள் அனுப்பப்பட்டாலோ அதன் ஸ்கிரீன்ஷட்டை எடுத்து மத்திய அரசின் சஞ்சார் சாதி தளத்தில் புகார் அளிக்கலாம். இதுபோன்ற மோசடி எண்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உதவியாக இருக்கும்