வாட்ஸ்அப்பில் விரைவில் புதிய அம்சம்! இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்!
வாட்ஸ்அப் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஷெட்யூல் மெசேஜ் என்ற வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தில் மெசேஜ்களை அனுப்பும் வசதி கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் மிக பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்கு மேலும் ஒரு புதிய அம்சத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. அந்த வகையில் பயனர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஷெட்யூல் மெசேஜ் என்ற வசதியை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரத்தில் மெசேஜ்களை அனுப்பும் வசதி கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி 2 வாரங்களுக்கு முன்பே மெசேஜ்களை ஷெட்யூல் செய்யலாம்!
தற்போது இந்த வசதி ஐபோன் பயனர்களுக்காக மட்டும் தரப்படவுள்ளதாகவும் விரைவில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தாங்கள் விரும்பும் தேதி மற்றும் நேரங்களில் மெசேஜ்களை அனுப்ப முடியும். குறிப்பாக பிறந்த நாள் வாழ்த்து, அலுலகத்தில் முக்கிய நிகழ்வு குறித்து நினைவூட்டல், முக்கிய அறிவிப்புகள் ஆகியவற்றை மறக்கமால் முன் கூட்டியே அனுப்ப முடியும். இதனால் கடைசி நேர சிக்கலை தவிர்க்க முடியும் என்பது கூடுதல் ஹைலைட்.
இதையும் படிக்க : ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் செய்வதில் இவ்வளவு நன்மைகளா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
இதற்காக செட்டிங் பகுதிக்கு செல்ல தேவையில்லை. சாட் பகுதியிலேயே ஷெட்யூல் செய்ய முடியும் இது தொடர்பாக WABetaInfo வெளியிட்ட தகவலின்படி வாட்ஸ்அப்பின் இந்த புதிய ஷெட்யூல் வசதி சாட் விண்டோவிலேயே ஷெட்யூல் செய்ய முடியும். பயனர்கள் தாங்கள் அனுப்ப வேண்டிய மெசேஜை டைப் செய்த பிறகு Send பட்டனை நீண்ட நேரம் அழுத்தி பிடித்தால், அந்த மெசேஜை எந்த தேதியில் எத்தனை மணிக்கு அனுப் வேண்டும் என்ற ஆப்சன் தோன்றும்.
தற்போது ஒரு சில பயனர்கள் ஆப்பிள் ஷார்ட்கட்ஸ் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி இந்த வசதியை பயன்படுத்தி வருகினறனர். இதனால் அவர்கள் பிரைவசி பாதிக்கக்கூடும் அபாயங்களும் இருந்தது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பிலேயே இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் இது பயனர்களுக்கு எளிமையான மற்றும் நம்பகமான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஷெட்யல் மெசேஜ்களை தனியாக நிர்வகிக்க முடியும். அதற்கான செக்சனும் வாட்ஸ்அப்பில் கொடுக்கப்படும். இதன் மூலம் அனுப்பப்படவுள்ள மெசேஜ்களின் பட்டியல் அதில் இடம் பெற்றிருக்கும். மேலும் அனுப்பும் தேதி மற்றும் நேரம் இடம் பெற்றிருக்கும். தேவையெனில் அதில் திருத்தம் மேற்கொள்ளலாம். ஒருவேளை எண்ணம் மாறினால் அந்த ஷெட்யூல் செய்த மெசேஜை நீக்க முடியும். இந்த வசதி தனிப்பட்ட சாட்களுக்கு மட்டுமல்லாமல் குரூப்களுக்கும் பொறுந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : யூடியூபில் இனி ஏஐ வீடியோக்கள் குறித்த கவலை இல்லை.. அசத்தல் அம்சம் அறிமுகம்!
இந்த வசதி 10 நிமிடங்கள் முதல் 2 வாரங்கள் வரை ஷெட்யூல் செய்யலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மூன் கூட்டியே மெசேஜ்களை திட்டமிடலாம். இதனால் தீபாவளி, பொங்கல் போன்ற முக்கியமான தினங்கள், திருமண நாள், பிறந்த நாள் வாழ்த்து, அலுவலக பணிகள் குறித்து நினைவூட்டல் போன்றவற்றை மறக்காமல் அனுப்ப முடியும்.



