AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வாட்ஸ்அப்பில் நம் சாட் பேக்கப்பிற்கு ஆபத்து? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழி

End-to-End Encrypted Backup : பெரும்பாலான பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் உரையாடல்களை கூகுள் டிரைவ் அல்லது ஐகிளௌட் பேக்கப் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அதில் என்ட் டு என்ட் என்கிரிப்டட் பேக்கப்பை ஆன் செய்யவில்லை என்றால் நம் உரையாடல்கள், டாக்குமென்ட்கள் ஹேக்கர்கள் கையில் சிக்க வாய்ப்பிருக்கிறது. அதனை எப்படி தவிர்ப்பது என பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் நம் சாட் பேக்கப்பிற்கு ஆபத்து? எப்படி தவிர்ப்பது? இதோ எளிய வழி
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 05 Jun 2026 15:48 PM IST

உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி வருகின்றனர். நண்பர்களுடன் பேசுவது முதல் அலுவலக பணிகள், முக்கியமான டாக்குமென்ட்கள் பகிர்வது, போட்டோ, வீடியோக்களை அனுப்புவது என நம் அன்றாட வாழ்க்கையின் முக முக்கியமான அங்கமாக மாறியிருக்கிறது. வாட்ஸ்அப் உலகையே நம் உள்ளங்கைக்குள் கொண்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் வாட்ஸ்அப்பில் பல நன்மைகள் இருந்தாலும் அதனால் சில ஆபத்துகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை எதிர்கொள்ள வாட்ஸ்அப்பில் உள்ள என்கிரிப்ஷன் என்ற வசதி பெரிதும் கைகொடுக்கும். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் மெசேஜ்கள் ஏற்கனவே என்ட் டு என்ட் என்கிரிப்ஷன் என்ற வசதியினால் பாதுகாப்பாக இருக்கின்றன. இதன் மூலம் மெசேஜை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் மட்டுமே அந்த தகவல்களை பார்க்க முடியும். ஆனால் சாட் பேக்கப்பிற்கு இந்த பாதுகாப்பு அம்சம் இருக்காது.

இதையும் படிக்க : அதிகரிக்கும் சைபர் மோசடிகள் – வாட்ஸ்அப்பின் 5 பாதுகாப்பு அம்சங்கள் இதோ

சாட் பேக்கப்பிற்கு ஆபத்து?

பெரும்பாலான பயனர்கள் தங்களது வாட்ஸ்அப் உரையாடல்களை கூகுள் டிரைவ் அல்லது ஐகிளௌட் பேக்கப் செய்து வைத்திருப்பார்கள். ஆனால் அதிதல் என்ட் டு என்ட் என்கிரிப்டட் வசதியை ஆன் செய்யாவிட்டால் கிளௌட் கணக்கு ஹேக் செய்யப்படும் பட்சத்தில் பல ஆண்டுகளாக சேமித்து வைத்திருக்கும் நம் உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பிறர் கைக்கு செல்லும் ஆபத்து ஏற்படும். குறிப்பாக நம் தனிப்பட்ட தகவல்கள், வங்கி விவரங்கள் மற்றும் முக்கிய டாக்குமென்ட்கள் மூலம் வெளியே கசிய வாய்ப்பிருக்கும் என்பதால் பொருளாதார இழப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இது போன்ற நேரங்களில் என்ட் டு என்ட் என்கிரிப்டட் பேக்கப் (End-to-End Encrypted Backup) வசதி பெரிதும் உதவும்.

வாட்ஸ்அப்பின் End-to-End Encrypted Backup

 

இதையும் படிக்க : இந்தியாவிலும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு அமலுக்கு வந்தது கட்டண முறை.. வாட்ஸ்அப் பிளஸின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

End-to-End Encrypted Backup என்றால் என்ன?

இந்த வசதி மூலம் நம் சாட் பகுதியை பேக்கப் செய்ய கிளௌட் போன்ற ஸ்டோரேஜ் அம்சத்துக்கு அனுப்புவதற்கு முன்பே என்கிரிப்ஷன் செய்து பாதுகாக்கும்.

  • இதன் மூலம் உங்கள் வாட்ஸ்அப் பேக்கப்பை நீங்கள் மட்டுமே பார்க்க முடியும்.
  • பாஸ்வேர்டு அல்லது என்கிரிப்ஷன் கீ மூலம் மட்டுமே பேக்கப்பை அணுக முடியும்.
  • வாட்ஸ்அப்பால் கூட நம் பேக்கப் ஃபைல்களை பார்க்க முடியாது.
  • ஹேக்கர்கள் மற்றும் நமக்கு தெரியாதவர்கள் நம் ஃபைல்களை அல்லது பேக்கப் மெசேஜ்களை பார்க்க முடியாது.

இந்த வசதியை எப்படி பயன்படுத்துவது?

  • இந்த ஆப்சனை எப்படி பயன்படுத்துவது என பார்க்கலாம்.
  • வாட்ஸ்அப்பின் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும்.
  • Chats என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும்.
  • Chat Backup என்பதை தேர்ந்தேடுக்கவும்.
  • End-to-End Encrypted Backup என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
  • பின் Password அல்லது Encryption Key ஆகியவற்றில் ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
  • நாம் தேர்த்தெடுத்த Password மற்றும் Encryption Key ஆகியவற்றை நினைவில் வைத்துக்கொள்வது நல்லது.

சமீப காலமாக சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிரித்து வருகின்றன. குறிப்பாக கிளௌட் கணக்குகள் கூட ஹேக் செய்யப்படுவது வழக்கமாகி வருகிறது. எனவே வாட்ஸ்அப் உரையாடல்களை மட்டுமில்லாமல், வாட்ஸ்அப் பேக்கப்பையும் பாதுகாப்பது மிக அவசியம்.

FAQ

1. வாட்ஸ்அப்பில் End-to-End Encrypted Backup என்றால் என்ன?

நம் வாட்ஸ்அப் பேக்கப்களை பாஸ்வேர்டு அல்லது என்கரிப்ஷன் கீ மூலம் பாதுகாக்கும் ஒரு அம்சம்.

2.  ஏன் இந்த வசதி முக்கியம்?

கூகுள் டிரைவ் அல்லது ஐகிளௌடில் சேமிக்கப்படும் சாட் பேக்கப்களை ஹேக்கர்களிடம் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

3. End-to-End Encrypted Backup வசதி இல்லாமல் வாட்ஸ்அப் பேக்கப் பாதுகாப்பாக இருக்காதா?

சாட் பேக்கப்பிற்கு இந்த வசதி கூடுதல் பாதுகாப்பை அளிக்கும்.

4. பாஸ்வேர்டு மறந்துவிட்டால் என்ன ஆகும்?

பாஸ்வேர்டு அல்லது என்கிரிப்ஷன் கீயை மறந்துவிட்டால் பேக்கப்பில் உள்ள தகவல்களை மீண்டும் பெற முடியாது.

Follow Us