படிக்க நேரமில்லையா?.. இனி இதழ்களையும் பாட்காஸ்ட் போல கேட்கலாம்.. ஸ்பாட்டிஃபையில் வந்த அசத்தல் அம்சம்!
Users Can Hear Magazines As A Podcast | பாடல் கேட்பதற்காக ஏராளமான மக்கள் பயன்படுத்தும் செயலியாக ஸ்பாட்டிஃபை உள்ளது. இந்த நிலையில், மிக நீளமான இதழ்களை குரல் வடிவில் கேட்க பாட்காஸ்ட் அம்சம் ஸ்பாட்டிஃபையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு (Technology Development) ஏற்ப அனைத்தும் மிகவும் எளிதானதாகவும், விரைவானதாகவும் மாறி வருகிறது. அந்த வகையில் மிக நீளமான இதழ்களை படிப்பதற்கு பதிலாக ஆடியோவாக கேட்கும் அம்சத்தை ஸ்பாட்டிஃபை (Spotify) அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக பாடல்கள், இசைகளை ஸ்பாட்டிஃபை செயலியில் கேட்டு வந்த நிலையில், தற்போது பாட்காஸ்ட் (Podcast) போல இதழ்களை ஆடியோவாக கேட்கும் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
படிக்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள்
முன்பெல்லாம் மனிதர்களின் காலையே செய்தித்தாள் மூலம் தான் தொடங்கும். செய்தித்தாள் படிப்பது, புத்தகங்கள் படிப்பது, வார இதழ்களை படிப்பது என மனிதர்களின் வாழ்வில் வாசிப்பு மிக முக்கிய பங்கு வகித்து வந்தது. ஆனால், தற்போது நிலமை தலைகீழாக உள்ளது. அதாவது, படிப்பதற்கு பதிலாக பலரும் ஆடியோவாக கேட்கவும், வீடியோவாக பார்க்கவும் விரும்புகின்றனர். இந்த நிலையில் தான், தற்போதைய காலத்திற்கு ஏற்ப ஸ்பாட்டிஃபை இந்த அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
இதையும் படிங்க : அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஓப்போ ரெனோ 16 சீரீஸ்!




இனி இதழ்களை ஆடியோவாக கேட்கலாம் – ஸ்பாட்டிஃபை அசத்தல்
சமையல் செய்யும்போது, நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது அல்லது ஏதேனும் வேலை செய்யும்போது ஒரு பெரிய இதழை ஆடியோவாக கேட்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதனை தான் தற்போது ஸ்பாட்டிஃபை அறிமுகம் செய்துள்ளது. ஸ்பாட்டிஃபை சந்தாதாரர்கள் தற்போது சுமார் 650 நீண்ட கட்டுறகளை ஆங்கிலத்தில் பாட்காஸ்ட் போல கேட்க முடியும்.
இதையும் படிங்க : எக்ஸ் தளத்தில் வீடியோக்களை Reshare, Reupload செய்தால் இனி பணம் இல்லை.. நிறுவனம் முக்கிய நடவடிக்கை!
ரோலிங் ஸ்டோன், தி அட்லாண்டிக் உள்ளிட்ட மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த பதிப்பகங்கள் இந்த பாட்கேஸ்டுகளை வெளியிட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பாட்காஸ்டும் சுமார் 2 மணி நேரம் கால அளவை கொண்டுள்ளன. இவை அனைத்தையும் ஸ்பாட்டிஃபை ஆடியோபுக் தயாரித்துள்ளது. இந்த பாட்காஸ்டுகள் மனித குரல் மற்றும் செயற்கை நுண்ணறிவு குரல் அம்சத்தால் உருவாக்கப்பட்டுள்ளதாக ஸ்பாட்டிஃபை கூறியுள்ளது.
டிஜிட்டல் குரல் சித்தரிப்பை பயன்படுத்தி உருவாக்கப்படும் பாட்காஸ்டுகள் அனைத்தின் மீதும் பயனர்களின் புரிதலுக்காக லேபிள் கொடுக்கப்படும் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.