அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமான ஓப்போ ரெனோ 16 சீரீஸ்!
Oppo Reno 16 Series Smartphones Introduced | ஓப்போ நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்திய ஸ்மார்ட்போன் (Smartphone) சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனமாக ஓப்போ (Oppo) உள்ளது. ஓப்போ ஸ்மார்ட்போன்களை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையில், அந்த நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ஓப்போ ரெனோ 16 (Oppo Reno 16) மற்றும் ஓப்போ ரெனோ 16 ப்ரோ (Oppo Reno 16 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஓப்போ ரெனோ 16 மற்றும் 16 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்
ஓப்போ ரெனோ நிறுவனம் ரெனோ சீரீஸில் புதிய புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. ஓப்போ ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : சுற்றுலாவுக்கு கிளம்புறீங்களா? இன்வெர்டரில் பேட்டரி வெடிப்பை தவிர்க்க இதை பண்ண மறக்காதீங்க!
ஓப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த ஓப்போ ரெனோ 16 6.78 இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளே அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டைமன்சிட்டி 9500 பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைட், 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், 50 மெகாபிக்சல் ஷூட்டர் கேமரா ஆகிய அட்டகாசமான கேமரா அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க : ஏசியை அடிக்கடி ஆன் மற்றும் ஆஃப் செய்வது மின் கட்டணத்தை குறைக்குமா? அதிகரிக்குமா?
இந்த ஸ்மார்ட்போன் 7,000 mAh பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 80 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் மற்றும் 50 வாட்ஸ் வயர்லஸ் சார்ஜிங் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஓப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,000-ல் இருந்து தொடங்குகிறது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ரேம் அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.49,000-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 16ஜிபி ரேம் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.55,000-க்கும், 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.56,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.