AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சுற்றுலாவுக்கு கிளம்புறீங்களா? இன்வெர்டரில் பேட்டரி வெடிப்பை தவிர்க்க இதை பண்ண மறக்காதீங்க!

மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க பலர் வீடுகளில் இன்வெர்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதை சரியாக பராமரிக்காமல் விட்டால் பேட்டரி சேதம், வெடிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம் . அதனை தவிர்ப்பது எப்படி என பார்க்கலாம்.

சுற்றுலாவுக்கு கிளம்புறீங்களா? இன்வெர்டரில் பேட்டரி வெடிப்பை தவிர்க்க இதை பண்ண மறக்காதீங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 24 May 2026 16:28 PM IST

கோடை விடுமுறையில் பல குடும்பங்கள் நீண்ட நாட்கள் சுற்றுலா மற்றும் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும் போது, பலர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மெயின் சுவிட்ச் மற்றும் மின் சாதனங்களை முறையாக ஆஃப் செய்துவிட்டு செல்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் வீட்டில் இருக்கும் இன்வெர்டர்களை மறந்துவிடுகிறார்கள். இன்வெர்டர்களை சரியாக பராமரிக்காமல் விட்டால் இன்வெர்ட்ர் பாதிப்பு, பேட்டரி சேதம், மின்கசிவு, சில நேரங்களில் பேட்டரி வெடிக்கவும் செய்யலாம். இந்த பிரச்னையை எப்படி தவிர்ப்பது என பார்க்கலாம்.

இன்வெர்டரில் பேட்டரி வெடிப்பை தவிர்க்க இதை பண்ண மறக்காதீங்க!

மின்வெட்டு ஏற்படும் நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க பலர் வீடுகளில் இன்வெர்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். அடிப்படை தேவைகளான ஃபேன், லைட் மற்றும் வைஃபை உள்ளிட்ட பல மின்சாதனங்கள் மின்வெட்டு நேரத்திலும் தொடர்ந்து இயங்க இன்வெர்டர் உதவுகிறது. ஆனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதை சரியாக பராமரிக்காமல் விட்டால் பேட்டரி சேதம், மின்கசிவு மற்றும் சில நேரங்களில் பேட்டரி வெடிப்பது போன்ற ஆபத்துகளும் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இதையும் படிக்க : வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பவர்களை தெரிந்துகொள்ள புதிய வசதி – பிரைவசி பாதிக்குமா?

இதுகுறித்து நிபுணர்கள் கூறுவதன்படி, வீட்டின் மெயின் மின்சார இணைப்பை ஆஃப் செய்யாமல் விடும் நிலையில், இன்வெர்டரை நார்மல் மோடில் மாற்றிவிட்டு செல்ல வேண்டும். இதனால் யாரும் வீட்டில் இல்லாவிட்டாலும் இன்வெர்டர் பேட்டரி தொடர்ந்து சரியான அளவில் சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும். இன்றைய பல இன்வெர்டர்களில் டியூபுலர் பேட்டரி மோட், லெட் ஆசிட் மோட் போன்ற தனிப்பட்ட அமைப்புகள் உள்ளன. எந்த வகை பேட்டரி பயன்படுத்தப்படுகிறதோ அதற்கேற்ற முறையை தேர்வு செய்வது பேட்டரியின் ஆயுளை அதிகரிக்க உதவும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில், நீண்ட நாட்களுக்கு வெளியே செல்வது என முடிவெடுத்தால் வீட்டின் மெயின் மின்சார இணைப்பையே முற்றிலும் அணைத்து விட்டு செல்லும்போது, இன்வெர்டரையும் முழுமையாக ஆஃப் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். வெளியே செல்லும் போது இன்வெர்டரின் பவர் ஸ்விட்சை ஆஃப் செய்ய வேண்டும், தொடர்ந்து பிளக் பாயிண்ட்டை நீக்க வேண்டும். பேட்டரியின் டெர்மினலை கவனமாக பிரிக்க வேண்டும். இப்படி செய்தவன் மூலம் பேட்டரி தானாகவே டிஸ்சார்ஜ் ஆவதனை தடுக்க முடியும்.

இதையும் படிக்க : ஸ்மார்ட்போனில் விரைவில் ஸ்டோரேஜ் Full ஆக என்ன காரணம்?.. இவை தான்!

ஒரு சில நிபுணர்கள் குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவதன் ஒரு பகுதியாக இன்வெர்டர் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யவது நல்லது. முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரி பொதுவாக 1 முதல் 2 மாதங்கள் வரை சார்ஜை தக்கவைத்துக்கொள்ளும். ஆனால் பேட்டரியில் முழுமையாக சார்ஜ் இல்லாமல் இருக்கும் போது அதன் செயல்திறன் குறையும், இதனால் கரண்ட் இல்லாத நேரங்களில் பேட்டரி நீண்ட நேரம் இயங்காது. அல்லது பேட்டரியின் ஆயுள்குறைந்து அதனை மாற்ற வேண்டி வரலாம். மீண்டும் வீடு திரும்பும் போது இன்வெர்டரை சுற்றி தூசி படிந்திருந்தால் அதனை சுத்தம் செய்ய வேண்டும், லெட் ஆசிட் பேட்டரி என்றால் அதன் தண்ணீர் அளவு சரியாக இருக்கிறதா என பார்க்க வேண்டும்.

Follow Us