AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சம்மரில் ஃபிரிட்ஜில் நாம் செய்யும் 7 தவறுகள் – அதிகரிக்கும் மின் கட்டணம் – தவிர்ப்பது எப்படி?

Summer Fridge Care : இந்தியாவில் கோடை வெப்பம் அதிகரிக்கும் நேரங்களில், ஃப்ரிட்ஜின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரிக்கும். இதனால் மின் பயன்பாடு அதிகரிப்பதோடு, ஃபிரிட்ஜின் ஆயுளும் குறைய வாய்ப்பு உள்ளது. ஃபிரிட்ஜில் நாம் செய்யும் 7 தவறுகள் மற்றும் அதனை தவிர்ப்பது குறித்து பார்க்கலாம்.

சம்மரில் ஃபிரிட்ஜில் நாம் செய்யும் 7 தவறுகள் – அதிகரிக்கும் மின் கட்டணம் – தவிர்ப்பது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 20 May 2026 14:56 PM IST

கோடை காலத்தில் ஏசி, ஃபிரிட்ஜின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்து வரும் நிலையில் மின் கட்டணம் அதிகரிக்கும். இதனால் பலரது மாத பட்ஜெட் பெரும் சவாலாக மாறி வருகிறது. நாம் செய்யும் சில பொதுவான தவறுகள் மின் கட்டணத்தை உயர்த்துவதோடு, ஃபிரிட்ஜ் மற்றும் ஏசியின் செயல்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக இந்தியாவில் கோடை வெப்பம் அதிகரிக்கும் நேரங்களில், ஃப்ரிட்ஜ் தொடர்ந்து அதிக வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது. இதனால் மின் பயன்பாடு அதிகரிப்பதோடு, ஃபிரிட்ஜின்ஆயுளும் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில், ஃப்ரிட்ஜை சரியாக பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்கலாம். அதகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஃப்ரிட்ஜை அதிகமாக நிரப்ப வேண்டாம்

காய்கறிகளை வாங்கி வந்தவுடன், உடனடியாக பிரிட்ஜில் அனைத்தையும் நிரப்புவது பலரின் பழக்கமாக இருக்கிறது. ஆனால் ஃப்ரிட்ஜ் முழுவதும் நிரம்பி இருந்தால், குளிர்ந்த காற்று ஃபிரிட்ஜிற்குள் முழுமையாக செல்ல முடியாது. இதனால் சில உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் ஏற்படும். எனவே பொருட்களுக்கு இடையில் சிறிது இடைவெளி விடுவது நல்லது.

இதையும் படிக்க : mAadhaar செயலி நிறுத்தம்? புதிய ஆதார் செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தல்

ஃப்ரிட்ஜ் கதவை நீண்ட நேரம் திறந்து வைக்க கூடாது

எதை எடுக்கலாம் என்று யோசித்தபடி பலர் ஃப்ரிட்ஜ் கதவை நீண்ட நேரம் திறந்தே வைத்திருப்பார்கள். அப்படி செய்தால் வெளிப்புற சூடான காற்று உள்ளே சென்று, மீண்டும் குளிர்விக்க ஃப்ரிட்ஜ் அதிக மின்சாரத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

சூடான உணவை உடனே வைக்காதீர்கள்

சூடாக இருக்கும் உணவுகளை நேரடியாக ஃப்ரிட்ஜில் வைப்பது பெரிய தவறு என்று கூறப்படுகிறது. அது ஃப்ரிட்ஜின் உள் வெப்பநிலையை உயர்த்தி, அருகில் உள்ள உணவுகளையும் பாதிக்கலாம். எனவே உணவின் வெப்பம் தணிந்த பிறகே ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

காய்கறி டிராயரை சரியாக பயன்படுத்துங்கள்

பழங்கள் மற்றும் காய்கறிகளுக்காக தனியாக வழங்கப்படும் டிராயர்களை அதற்காகவே பயன்படுத்த வேண்டும். அனைத்து பொருட்களையும் மொத்தமாக வைத்தால், அவை விரைவில் கெடக்கூடும்.

கதவு ரப்பரை சரிபார்க்கவும்

ஃப்ரிட்ஜ் கதவின் ஓரத்தில் இருக்கும் ரப்பர் ஸ்டிராப் குளிர்ந்த காற்று வெளியேறாமல் தடுக்கிறது. அது அழுக்காகவோ அல்லது சேதமடைந்திருந்தாலோ, ஃப்ரிட்ஜ் அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். அதனால் அந்த ரப்பரை அடிக்கடி சுத்தம் செய்து சரிபார்க்க வேண்டும்.

சுவருடன் ஒட்ட வைக்காதீர்கள்

இடத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதற்காக பலர் ஃப்ரிட்ஜை சுவருடன் ஒட்டியிருக்கும்படி வைப்பார்கள். ஆனால் அதனால் மோட்டார் மற்றும் காயில்களில் உருவாகும் வெப்பம் வெளியேற முடியாமல் போகும். எனவே ஃப்ரிட்ஜைச் சுற்றி சிறிய இடைவெளி இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிக்க : அதிகரிக்கும் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடிகள் – வந்தாச்சு சிபிஐயின் அபய் ஏஐ

எப்போதும் மேக்ஸ் கூலிங் தேவையில்லை

கோடைகாலம் என்பதால் எப்போதும் மேக்ஸ் கூலிங் செட்டிங்கில் வைத்திருப்பது அதிக மின்சாரத்தை பயன்படுத்தும். சில நேரங்களில் உணவுகள் தேவையில்லாமல் உறையவும் வாய்ப்பு உள்ளது. அதனால் தேவைக்கு ஏற்ப நடுத்தர வெப்பநிலையை பயன்படுத்துவது நல்லது.

கோடை காலத்தில் ஃப்ரிட்ஜ் தொடர்ந்து வேலை செய்வதால், சிறிய தவறுகளே பெரிய மின்சார செலவாக மாறக்கூடும். அதனால் தினசரி பயன்பாட்டில் சில மாற்றங்கள் செய்தாலே, மின்சார கட்டணத்தை குறைக்கலாம். உணவுப் பொருட்களை நீண்ட நேரம் பாதுகாக்கலாம். ஃப்ரிட்ஜின் ஆயுளை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Follow Us