mAadhaar செயலி நிறுத்தம்? புதிய ஆதார் செயலியை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தல்
New Aadhaar App : தற்போது பயன்பாட்டில் உள்ள mAadhaar செயலியை நிறுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் பழைய செயலியை பயன்படுத்தி வந்தவர்கள் இனி புதிய ஆதார் செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும் .
இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI, தற்போது பயன்படுத்தப்பட்டு வந்த ஆதார் செயலியை விரைவில் முற்றிலுமாக நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து பயனர்கள் புதிய ஆதார் செயலியை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. புதிய ஆதார் செயலியை பாதுகாப்பு மற்றும் பிரைவசி வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் பழைய ஆதார் செயலியை காட்டிலும் புதிய ஆதார் செயலி அதிக பாதுகாப்பு அதிக வசதிகளுடன் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆதார் செயலி அறிமுகம்
தற்போது பயன்பாட்டில் உள்ள mAadhaar செயலியை நிறுத்த இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முடிவு செய்துள்ளது. இதனால் பழைய செயலியை பயன்படுத்தி வந்தவர்கள் இனி புதிய ஆதார் செயலியை டவுன்லோடு செய்து பயன்படுத்த வேண்டும். புதிய ஆதார் செயலியில் பல மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்ப்டுள்ளன.




இதையும் படிக்க : இனி மொத்த செட்டில்மெண்டும் வெறும் 3 நாளில்.. இபிஎஃப்ஓவில் வரும் முக்கிய மாற்றம்!
- கியூஆர் கோட் மூலம் ஆதார் பகிர்வு
- முக அடையாள சரிபார்ப்பு
- ஆஃப்லைன் ஆதார் வெரிஃபிகேஷன்
- பயோமெட்ரிக் லாக் மற்றும் அன்லாக் வசதி
- பிரைவசி கண்ட்ரோல் வசதி
அதிக பாதுகாப்பு வசதிகளுடன் புதிய ஆதார் செயலி
The #mAadhaar App is retiring soon. Now experience a smarter, faster, and more secure digital journey with the new #AadhaarApp. From secure QR-based #Aadhaar sharing to enhanced privacy controls and seamless access to Aadhaar services — the new app is designed to make your… pic.twitter.com/snfeUx4Rgr
— Aadhaar (@UIDAI) May 15, 2026
புதிய செயலி மூலம் கியூஆர் கோட் அடிப்படையில் ஆதாரை பாதுகாப்பாக பகிர முடியும். இதனால் இனி கையில் ஜெராக்ஸ் காப்பி எடுத்து செல்ல வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக பழைய ஆதார் செயலிகளில் இருந்த தகவல்கள் புதிய செயலிக்கு தானாக மாறாது என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அதனால் பயனர்கள் புதிய செயலியில் ஆதார் புரொஃபைலை மீண்டும் மாற்ற வேண்டியிருக்கும்.
இதையும் படிக்க : அஞ்சல சேமிப்பு திட்டங்கள் போதும்.. சுலபமாக ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம்.. எப்படி?
புதிய ஆதார் செயலியை எப்படி டவுன்லோடு செய்வது?
இதனை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் புதிய ஆதார் செயலியை டவுன்லோடு செய்யலாம். ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட்டு ஓடிபி மூலம் வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். சிலருக்கு முக அடையாள வவரங்கள் கேட்கப்படலாம். பின்னர் பின் அல்லது விரல் ரேகை மூலம் லாக் செய்யலாம்.
பயனர்களின் பிரைவசி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவது தான் புதிய ஆதார் செயலியின் முக்கிய நோக்கம் என கூறப்படுகிறது. இதன் மூலம் நம் அனைத்து தகவல்களையும் கட்டுப்படுத்த முடியும்.