AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி மொத்த செட்டில்மெண்டும் வெறும் 3 நாளில்.. இபிஎஃப்ஓவில் வரும் முக்கிய மாற்றம்!

Users Can Get Final Settlement Within 3 Days | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை ஊழியர்கள் மூன்று நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ள நிலையில், அதேபோல மொத்த பணத்தையும் மூன்று நாட்களுக்குள் எடுத்துக்கொள்ளும் வசதி வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 May 2026 16:50 PM IST
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியரகளுக்கான அசத்தல் திட்டமாக உள்ளது தான் ஊழியர் வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தின் மூலம் ஊழியர்கள் பணி செய்யும்போதும், பணி ஓய்வு பெற்ற பிறகும் கூட பல்வேறு நலன்கள் மற்றும் சிறப்பு அம்சங்களை பெற முடியும். 

1 / 5
ஊழியர்கள் பணியாற்றும்போது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் அவர்கள் பெயரில் தொடங்கப்படும் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும். அவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை பணியின் போதோ அல்லது பணி ஓய்வு பெற்ற பிற்கோ பயனர்கள் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. 

2 / 5
பெரும்பாலான நபர்கள் தங்களது பணி காலம் முழுவதும் பிஎஃப் பணத்தை எடுக்காமல் பணி ஓய்வுக்கு பிறகு எடுத்து தங்களது பணி ஓய்வின் போது பயன்படுத்திக்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், பிஎஃப் இறுதி தொகையை திரும்ப பெறுவதற்கான நடைமுறையை விரைவில் தானியங்கி முறைக்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

3 / 5
பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் தங்களின் இறுதி தொகையை எடுப்பதற்காக விண்ணப்பம் செய்யும்போது எந்தவித தாமதமும் இல்லாமல் அவர்களின் வங்கி கணக்குகளுக்கு உடனடியாக பணம் சென்று சேருவதை உறுதி செய்யும் ஆட்டோ செட்டில்மெண்ட் முறை தான் அது. 

4 / 5
தற்போது ரூ.5 லட்சம் வரை பகுதி அளவு பணத்தை விண்ணப்பித்து மூன்றே நாட்களில் எடுத்துக்கொள்ளும் வசதி உள்ளது. இந்த நிலையில் தான், பணி ஓய்வு பெற்ற பிறகு பிஎஃப் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்ளும் முறை அமலுக்கு வர உள்ளதாக இபிஎஃப்ஓ தலைவர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us