AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் நடிகர் அரவிந்த் ஆகாஷ் – மலேசியாவில் கோலாகலமாக நடைப்பெற்றது திருமணம்

Actor Aravind Akash married his long-time girlfriend | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக உள்ளவர் நடிகர் அரவிந்த் ஆகாஷ். இவர் இன்று தனது நீண்ட நாள் காதலியை மலேசியாவில் திருமணம் செய்துகொண்டுள்ள நிலையில் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் நடிகர் அரவிந்த் ஆகாஷ் – மலேசியாவில் கோலாகலமாக நடைப்பெற்றது திருமணம்
அரவிந்த்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 01 Jul 2026 17:43 PM IST

தமிழ் சினிமாவில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகர் அரவிந்த் ஆகாஷ். இவர் சினிமாவில் ஆரம்ப காலக்கட்டத்தில் சின்ன சின்ன பெயரிடப்படாக வேடங்களிலேயே நடித்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2001-ம் ஆண்டு முதல் சினிமாவில் பெயிடப்படக்கூடிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் வெளியான படங்கள் பெரும்பாலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறுப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக நடிகர் அரவிந்த் ஆகாஷ் நடிப்பில் வெளியான காதல் எஃப்.எம்., உன்னாலே உன்னாலே, சென்னை 600 028, சரோஜா, அ ஆ இ ஈ, கோவா மற்றும் மங்காத்தா என பலப் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகராக வலம் வரும் நடிகர் அரவிந்த் ஆகாஷ் நடிப்பில் இறுதியாக தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கடந்த 2024-ம் ஆண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது. அதனைத் தொடர்ந்து வேறு எந்தப் படங்களும் இதுவரை அரவிந்த் ஆகாஷ் நடிப்பில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்தார் நடிகர் அரவிந்த் ஆகாஷ்:

நடிகர் அரவிந்த் ஆகாஷ் இயக்குநர் வெங்கட் பிரபுவின் கேங்கில் உள்ள ஒரு நபர் ஆவார். வெங்கட் பிரபுவின் கேங்கில் உள்ள பலர் பல ஆண்டுகளாக பேச்சுளர் வாழ்க்கையில் இருந்த நிலையில் தற்போது சமீப காலமாக திருமணம் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது அரவிந்த் ஆகாஷ் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தனது நீண்ட நாள் காதலியை இன்று மலேசியாவில் கோலாலம்பூரில் திருமணம் செய்துள்ளார் நடிகர் அரவிந்த் ஆகாஷ். இவரது திருமணத்தில் கலந்துகொண்ட பிரபலங்கள் புகைப்படங்களை வெளியிட்டு தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… சூர்யா 47 படத்தின் ஷூட்டிங் நிலவரம் என்ன? வைரலாகும் தகவல்

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… பத்து ஆண்டுகளுக்கும் மேலாகியும்.. இன்னும் குறும்புக்காரர்களாகவே இருக்கிறோம் – விஷாலுடனான நட்பு குறித்து அஞ்சலி நெகிழ்ச்சி பதிவு!

Follow Us