Train: மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி.. ட்ரெயின் படத்தின் டீசர் அப்டேட் இதோ!
Vijay Sethupathi Train Movie Update: கோலிவுட் சினிமாவில் தனது திரைக்கதை மற்றும் படங்கள் மூலமாக மக்களை ஈர்ப்பவர் மிஷ்கின். இவரின் இயக்கத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த படம்தான் ட்ரெயின். இப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ள நிலையில், இதன் டீசர் குறித்து விஜய் சேதுபதி அப்டேட் கொடுத்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathy) இந்திய சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இதுவரை தமிழில் மட்டும் ஹீரோவாக நடித்தது ஹிட் படங்களை கொடுத்த இவர், தெலுங்கில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கத்தில் ஸ்லாம்டாக் (Slumdog) என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வாத்தி பட பிரபல நடிகை சம்யுக்தா மேனன் (Samyuktha Menon) நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்த படங்களின் வரிசையில், இயக்குநர் மிஷ்கின் (Mysskin) இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துவந்த படம்னாதான் ட்ரெயின் (Train).
இப்படமானது சிறப்பாக மற்றும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேல் இப்படம் வெளியாகாமல் காத்திருக்கும் நிலையில், இதன் டீசர் அப்டேட் குறித்து விஜய் சேதுபதி பதிவை வெளியிட்டுள்ளார்.




இதையும் படிங்க: இயக்குநர் சுதா கொங்கராவால் அதர்வாவின் இதயம் முரளி படத்திற்கு வந்த சிக்கல் – என்ன நடந்தது தெரியுமா?
ட்ரெயின் படம் குறித்து நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட எக்ஸ் பதிவு:
#Train teaser and audio coming soon 🙂@DirectorMysskin @shrutihaasan @nasser_kameela @ksravikumardir @ira_dayanand @itsNarain @preethy_karan @KalaiActor #YugiSethu @fowziafathima @editorsriwat #StreetLight @vijaytelevision @saregamasouth @RIAZtheboss pic.twitter.com/Ce5dXHU8va
— VijaySethupathi (@VijaySethuOffl) June 29, 2026
விஜய் சேதுபதியின் ட்ரெயின் திரைப்படத்தில் அவருடன் நடிகை ஸ்ருதிஹாசன், நாசர், நரேன், கலையரசன், யோகி சேது, இரா தயநாத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாகும் என விஜய் சேதுபதி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் டீஸருடன் படத்தின் பாடல்களும் தொகுப்பாக வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் இதன் ரிலிஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: களத்துல இறங்குவோமா..! அதிரடியாக வெளியானது விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி ரவுண்ட் 2 பட ட்ரெய்லர்!
ட்ரெயின் படத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்க, வி க்ரியேஷன் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்துவருகிறார். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக மிஷ்கின் பாடல்களை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இசையமைப்பில், ஸ்ருதிஹாசன் குரலிலும் இப்படத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னே முதல் பாடல் வெளியாகிவிட்டது. இப்படமும் உருவாக்கப்பட்டு 2 ஆண்டுகளுக்கும் மேல் ஆகும் நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் உள்ளது. விரைவில் இதுதொடர்பான தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.