AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மகுடம் படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும் – நடிகை அஞ்சலி சொன்ன அப்டேட்

Actress Anjali talks about Magudam movie | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார் நடிகை அஞ்சலி. இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாக உள்ள படம் மகுடம். இந்தப் படத்தில் தனது கதாப்பாத்திரம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

மகுடம் படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும் – நடிகை அஞ்சலி சொன்ன அப்டேட்
அஞ்சலிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 29 Jun 2026 17:22 PM IST

தெலுங்கு சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நடிகையாக நடிக்கத் தொடங்கினார் நடிகை அஞ்சலி. இவர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினாலும் தொடர்ந்து தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் தொடர்ந்து நடிக்கத் தொடங்கினார். அதன்படி தமிழ் சினிமாவில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் என்ற படத்தின் மூலம் நாயகியாக நடித்தார். இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆன நிலையில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்து வந்தார் நடிகை அஞ்சலி. அதிலும் குறிப்பாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் அதிக அளவில் படங்களில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அஞ்சலி நடிப்பில் இறுதியாக கடந்த 2025-ம் ஆண்டில் திரையரங்குகளில் வெளியான படங்கள் கேம் சேஞ்சர், மத கஜ ராஜா மற்றும் பறந்து போ. இந்தப் படங்களில் நடிகை அஞ்சலியின் நடிப்பை ரசிகர்கள் அதிக அளவில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகியப் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதில் தற்போது நடிகை அஞ்சலி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் மகுடம். இந்தப் படத்தை நடிகர் விஷால் நாயகனாக நடித்தது மட்டும் இன்றி இயக்கவும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் குறித்து அஞ்சலி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது.

மகுடம் படத்தில் என் கேரக்டர் இப்படிதான் இருக்கும்:

விஷால் இயக்கும் ‘மகுடம்’ படத்தில் நான் ஒரு வலிமையான மற்றும் அழகான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். அவர் எனக்கு 15 ஆண்டுகளாக நண்பராக இருந்து வருகிறார்; எங்களுக்கிடையே ஒரு சிறப்பான பிணைப்பு உள்ளது. இது ஒரு மிகச் சிறந்த திரைப்படம்—அவரது 99-வது படம். ஆர்.பி. சௌத்ரி சாரை நாங்கள் இப்போது மிஸ் செய்கிறோம், ஆனால் அவரது ஆசிகள் எங்களுடன் இருக்கும் என்று நம்புகிறோம் என்று நடிகை அஞ்சலி சமீபத்திய பேட்டியில் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… ஓம் படத்துடன் மோதுகிறதா ரஜினியின் ஜெயிலர் 2?.. தனுஷ் எடுக்கப்போகும் அதிரடி முடிவு!

இணையத்தில் வைரலாகும் நடிகை அஞ்சலியின் பேச்சு:

Also Read… வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் மா இண்டி பங்காரம் படம் – இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா

Follow Us