வசூலில் மாஸ் காட்டும் சமந்தாவின் மா இண்டி பங்காரம் படம் – இதுவரை வசூலித்தது எவ்வளவு தெரியுமா
Maa Inti Bangaaram Movie Box Office Collection | தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் தெலுங்கு சினிமாவில் வெளியான மா இண்டி பங்காரம் படம் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.
தெலுங்கு சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார் நடிகை சமந்தா ரூத் பிரபு. இவரது நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக ம்ட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்த நடிகை சமந்தா ரூத் பிரபு தற்போது கதையின் நாயகியாக நடித்து வருகிறார். இவர் படங்களில் மட்டும் இன்றி இணையதள தொடர்களிலும் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. சொந்த வாழ்க்கை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த சமந்தா தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
அப்படி அவர் மா இண்டி பங்காரம் படத்தில் நடித்து கொண்டு இருக்கும் போதே ராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு மீண்டும் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். இப்படி இருக்கும் சூழலில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் கடந்த வாரம் தெலுங்கு சினிமாவில் மா இண்டி பங்காரம் படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் தற்போது விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.




உலக அளவில் ரூபாய் 73 கோடிகளை வசூலித்தது மா இண்டி பங்காரம் படம்:
ஃபேமிலி செண்டிமெண்ட் பாணியில் உருவான இந்தப் படம் தெலுங்கு சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய சினிமா ரசிகர்கலிடையேயும் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் படக்குழு தற்போது வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, மா இண்டி பங்காரம் வசூலில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்ரது. மேலும் இந்தப் படம் உலக அளவில் ரூபாய் 73 கோடிகள் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read… மீண்டும் இணைந்த 96 பிரபல ஜோடி.. வெளியானது புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
மா இண்டி பங்காரம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#MaaIntiBangaaram continues its golden run at the box office 💥
A GROSS OF 73 CRORES WORLDWIDE & COUNTING ❤🔥
Superb bookings all over for this weekend 💥
Watch the BLOCKBUSTER 𝐒𝐀𝐌BHAVAM #MaaIntiBangaaram in theatres today ❤🔥
Book your tickets now!
🎟️… pic.twitter.com/ya5wtPGi5j— Tralala Moving Pictures (@TralalaPictures) June 27, 2026