AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kajal Aggarwal: நடிகர்களை விட நடிகைகளுக்கே சவால்கள் அதிகம் – மனம்திறந்த காஜல் அகர்வால்!

Kajal Aggarwal About Actresses challenges: தென்னிந்திய சினிமாவில் தற்போதுவரையிலும் சினிமாவில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களால் ரசிக்கப்பட்டுவருபவர் காஜல் அகர்வால். இவரின் நடிப்பில் தி இந்தியா ஸ்டோரி என்ற புதிய திரைப்படமானது உருவாகியுள்ளது. இது தொடர்பாக அவர் பேசுகையில், சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

Kajal Aggarwal: நடிகர்களை விட நடிகைகளுக்கே சவால்கள் அதிகம் – மனம்திறந்த காஜல் அகர்வால்!
காஜல் அகர்வால்Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 27 Jun 2026 20:42 PM IST

நடிகை காஜல் அகர்வால் (Kajal Aggarwal) தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் சூர்யா (Suriya) போன்ற பல்வேறு பிரபாலங்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் அவரின் திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறிந்துகொண்ட நிலையில், தற்போது இந்தி சினிமாவில் சிறப்பான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து லீட் வேடத்தில் நடித்துவருகிறார். இவர் இறுதியாக இந்தியில் சிக்கந்தர் (Sikandar) என்ற படத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடித்திருந்தார். இப்படத்தை அடுத்ததாக இந்தி மொழியை மையமாக கொண்டு இவர் நடித்துள்ள படம்தான் தி இந்தியா ஸ்டோரி (The India Story).

இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருந்த நிலையில், சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அது தொடர்பாக பேசுகையில், காஜல் அகர்வால் சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான தகவல் அவரின் ரசிகர்கள் மத்தியில் வைரலாகப் பரவிவருகிறது.

இதையும் படிங்க: தலைவரே மைக்-ஆ பிடிச்சி உண்மைய சொல்லவேண்டிய நிலை.. சர்ச்சையை கிளப்பிய விஷ்ணு விஷால்!

சினிமாவில் நடிகைகளுக்கு ஏற்படும் சவால்கள் குறித்து பேசிய காஜல் அகர்வால்:

நடிகை காஜல் அகர்வால் பேசுகையில், “நடிகர்களை விட நடிகைகளுக்கு சினிமாவில் சவால்கள் அதிகம். இங்கு நம்மை நிலைநிறுத்தி கொள்ள மிகவும் போராடவேண்டியிருக்கிறது. எனவே முழு திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் மனதை கவருவேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐயா கருப்பனே வாருமையா.. பாடகர் மகாலிங்கத்திற்கு பல லட்சம் மதிப்பிலான தங்க சங்கிலியை பரிசளித்த சூர்யா!

பின் தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் குறித்து அவர் பேசுகையில், பூச்சி கொல்லி விவசாயத்தின் பின்னணியில் மறைந்திருக்கும், ஆபத்தா உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ஒரு சிறந்த படைப்பாக இந்த படமானது உருவாகியிருக்கிறது” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

தி இந்தியா ஸ்டோரி திரைப்படத்தின் டீசர் குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

காஜல் அரகவாலின் தி இந்தியா ஸ்டோரி படத்தை டி.கே.சேட்டன் இயக்க, ஜீ ஸ்டூடியோஸ் என்ற நிறுவனமானது சிறப்பாக தயாரித்துவருகிறது. இதில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் ஸ்ரேயாஸ் தல்படே ஹீரோவாக நடித்துள்ளார். விவசாயம் மற்றும் பூச்சிக்கொல்லி பின்னணி கதையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், 2026ம் ஆண்டு ஜூலை 24ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது.

Follow Us