AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இனி ஆதாரில் இந்த விவரங்கள் இருக்காது.. புதிய தோற்றம்.. வெளியான முக்கிய தகவல்!

Aadhaar Card Will Not Have These Details Anymore | தற்போது வழங்கப்படும் ஆதார் கார்டில் ஒருவரின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்று இருக்கும். இந்த நிலையில், இனி வரும் ஆதார் கார்டில் இரண்டு விவரங்கள் மட்டுமே இருக்கும்படி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இனி ஆதாரில் இந்த விவரங்கள் இருக்காது.. புதிய தோற்றம்.. வெளியான முக்கிய தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Apr 2026 12:23 PM IST

இந்திய பொதுமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் கார்டில் (Aadhaar Card), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority of India) தொடர்ந்து பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இனி ஆதார் கார்டில் என்ன என்ன விவரங்கள் இடம்பெற்று இருக்க வேண்டும் என்பது குறித்து புதிய மாற்றத்தை கொண்டுவர உள்ளதாகவும், இதன் மூலம் ஆதார் கார்டின் வடிவமே மாற உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டு குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஆதார் கார்டில் இடம்பெற்றுள்ள விவரங்கள்

தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கும் ஆதார் கார்டுகளில் 12 இலக்க எண், பொதுமக்களின் பெயர், வயது, பாலினம், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவரங்கள் வெளிப்படையாக தெரிவதன் காரணமாக அதனை பயன்படுத்தி மோசடி சம்பவங்கள் அரங்கேறுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இத்தகைய சிக்கலில் இருந்து பாதுகாப்பாக இருக்க மாஸ்குடு ஆதார் கார்டை (Masked Aadhaar Card) பயன்படுத்தலாம்  என்று அதற்கான அம்சத்தை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்குகிறது. இந்த நிலையில் தான், இந்த முக்கிய மாற்றம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு சாதனை.. தொடர்ந்து 2வது ஆண்டாக இரட்டை இலக்க வளர்ச்சி!

புதிய ஆதார் கார்டில் என்ன என்ன விவரங்கள் இடம்பெறும்?

2026, டிசம்பர் மாதத்துக்குள் ஆதார் கார்டு தோற்றத்தில் இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, புதிய ஆதார் கார்டில் புகைப்படம் மற்றும் கியூஆர் கோடு ஆகிய இரண்டு விவரங்கள் மட்டுமே இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

என்ன என்ன விவரங்கள் நீக்கம் செய்யப்படும்?

  • பெயர்
  • ஆதார் எண்
  • முகவரி
  • பிறந்த தேதி
  • பாலினம்

இதையும் படிங்க : வைப்பு நிதி திட்டங்களில் முறையாக முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம்.. அதற்கு இவற்றில் கவனமாக இருக்க வேண்டும்!

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக இந்த மேற்குறிப்பிட்ட விவரங்கள் நீக்கம் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாமல் உள்ள நிலையில், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us