அதிக கடன் சுமையில் இருக்கிறீர்களா?.. ரீ பைனான்சிங் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
Manage Debts With Re Financing Method | பலரும் அதிக கடன் சுமைகளில் சிக்கி, சவால்களை எதிர்க்கொள்வர். இந்த நிலையில், ரீ பைனான்ஸ் முறையை பயன்படுத்தி கடன்களை நிர்வகிப்பது, அதில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண்பது எப்படி என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
முன்பெல்லாம் அவசர தேவைகளுக்கு கடன் வாங்கும் பழக்கம் இருந்தது. ஆனால், தற்போது மாத தவணை முறையில் எளிதாக பொருட்களை வாங்க முடிகிறது என்பதால் தங்களுக்கு தேவை இல்லாத போதும், ஆடம்பரத்திற்காக பலரும் பொருட்களை வாங்குகின்றனர். இவ்வாறு ஒருவர் பல பொருட்களுக்கு மாத தவணை செலுத்துவது அவரின் கடன் சுமையை அதிகரிக்கும். இந்த நிலையில், கடன் சுமையை குறைக்கும் ரீ-பைனான்ஸ் (Re – Finance) முறை என்றால் என்ன, அது எதற்கு பயன்படுகிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரீ பைனான்ஸ் என்றால் என்ன?
ரீ பைனான்ஸ் என்பது மறு நிதியளிப்பு என பொருள் படும். அதாவது பழைய கடன்களை அடைத்துவிட்டு, புதிய வட்டி விகிதம் அல்லது சிறந்த விதிமுறைகள் உடன் கூடிய வேறு ஒரு வங்கியில் புதிய கடனை பெறும் நடைமுறைதான் இது. இவ்வாறு செய்வதன் மூலம் குறைந்த வட்டி, குறைந்த மாத தவணை மற்றும் நீண்ட கால அவகாசம் போன்ற நன்மைகளை பெற முடியும்.
இதையும் படிங்க : 5 ஆண்டுகளுக்குள் ரூ.5 லட்சம் பிஎஃப் பணத்தை எடுத்தவருக்கு ரூ.1.5 லட்சம் வரி.. விதிகள் கூறுவது என்ன?




ரீ பைனான்ஸ் முக்கிய அம்சங்கள்
ரீ பைனான்ஸ் செய்யும்போது பல்வேறு சிறப்பு அம்சங்களை பெற முடியும். அவை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
குறைந்த வட்டி விதிகம்
கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறையும்போது, அதிக வட்டி விகிதத்தில் உள்ள பழைய கடன்களை, குறைந்த வட்டி கொண்ட புதிய கடன் திட்டத்திற்கு மாற்றுவதன் மூலம் வட்டி சுமை குறையும்.
மாத தவணை குறையும்
கடனை திருப்பி செலுத்தும் காலத்தை நீட்டிப்பதன் மூலம் மாதம் மாதம் செலுத்தும் மாத தவணை குறையும்.
இதையும் படிங்க : அதிகரிக்கும் யுபிஐ மோசடிகள் – இதையெல்லாம் பண்ணாதீங்க – எச்சரிக்கும் நிபுணர்கள்
பணப்புழக்கம்
சொத்து மதிப்பில் உள்ள கூடுதல் ஈக்விட்டியை பணமாக பெற்றுக்கொள்ளலாம். வீட்டின் மதிப்பு அதிகரிக்கும்போது இருக்கும் கடனுக்கு மேல் கூடுதலாக கடன் வாங்கி சிக்கல் மிகுந்த கடன்களை அடைத்துவிட்டு திட்டமிட்டு மீதமுள்ள கடன்களை அடைக்கலாம்.
கடன்களை ஒன்றிணைத்தல்
தனிநபர் கடன், கிரெடிட் கார்டு உள்ளிட்ட பல்வேறு கடன்களை ஒரே கடனாக மாற்றி நிர்வகிப்பது கடன்களை கையாள மிக எளிமையான முறையாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட முறைகளை பின்பற்றும் பட்சத்தில், அதிக கடன் சிக்கல்களில் சிக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு தீர்வு கிடைக்கும்.