AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!

Paytm Payments Bank Licence Cancelled | பேடிஎம் நிறுவனத்தின் பேடிஎம் பேமென்ட்ஸ் பேங்க் நொய்டாவில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை இந்த வங்கி தொடர்ந்து மீறி வந்ததாக கூறி ஆர்பி, இந்த வங்கியின் உரிமத்தை ரத்து செய்துள்ளது.

பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ.. அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 25 Apr 2026 13:42 PM IST

மும்பை, ஏப்ரல் 25 : இந்தியாவில் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலியாக பேடிஎம் (Paytm) உள்ள நிலையில், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (Paytm Payments Bank) உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) ரத்து செய்துள்ளது வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன, இதனால் பயனர்களுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்த ஆர்பிஐ

2017 ஆம் ஆண்டு நொய்டாவில் பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி தொடங்கப்பட்டது. இதற்காக அந்த நிறுவனம் இந்திய ரிசர்வ் வங்கியிடம் உரிமம் பெற்றது. இந்த நிலையில் தான், பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (ஏப்ரல் 24, 2026) அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களின் நலன்களுக்கு பாதகமான முறையில் வங்கி நடைமுறைகள் இருந்ததன் காரணமாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி அவசியம் இல்லை.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்!

பேடிஎம் உரிமம் ரத்து – அறிக்கை வெளியிட்டுள்ள ஆர்பிஐ

இது தொடர்பாக ஆர்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, வாடிக்கையாளர்களின் நலன்களுக்கும், பொதுநலனுக்கும் பாதகமாக பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கி நிர்வாகத்தின் பொதுவான தன்மை உள்ளது. இதன் காரணமாக பேடிஎம் வங்கி எந்த விதமான வங்கி நடவடிக்கைகளிலும் ஈடுபட தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு ஓடிபி அவசியம் இல்லை.. ஆர்பிஐ சொன்ன குட் நியூஸ்!

குறிப்பாக இந்த வங்கியின் மேலாண்மை மற்றும் நிர்வாக முறை திருப்திகரமாக இல்லை என்றும், வங்கி ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளை இந்த வங்கி தொடர்ந்து மீறி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியை தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குவது, பொதுமக்களுக்கு எந்த விதமான நன்மையையும் தராது என்பதால் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ஆர்பிஐ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us