AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சுகன்யா சம்ரித்தி யோஜனா..பெண் குழந்தைக்கு 21 வயதுக்கு முன்னதாகவே பணத்தை எடுக்க முடியுமா?

Sukanya Samriddhi Yojana Scheme | அரசு அஞ்சலங்கள் மூலம் செயல்படுத்தும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இந்த சுகன்யா சம்ரித்தி யோஜனா உள்ளது. இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது 21 வயதுக்கு முன்னதாகவே பணத்தை எடுத்துக்கொள்ள முடியுமா என்பது குறித்து பார்க்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா..பெண் குழந்தைக்கு 21 வயதுக்கு முன்னதாகவே பணத்தை எடுக்க முடியுமா?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Apr 2026 15:26 PM IST

குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க பெற்றோர்கள் ஏதேனும் திட்டத்தில் முதலீடு (Investment) செய்ய வேண்டும் அல்லது சேமிப்பு (Saving) செய்ய வேண்டும் என நினைப்பர். அதற்காக பல சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களும் உள்ளன. அந்த வகையில், பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக செயல்படுத்தப்படும் திட்டம் தான் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY – Sukanya Samriddhi Yojana) . இந்த திட்டத்தில் முதலீடு செய்து அதிக லாபத்தை பெறலாம். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை இந்த திட்டம் உறுதி செய்கிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் மொத்த முதலீட்டு காலமான 21 ஆண்டுகளுக்கு முன்னதாகவே முதலீடு செய்த பணத்தை எடுக்க முடியுமா என்பது குறித்து விரிவாக பர்க்கலாம்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா – பெண் குழந்தைகளுக்கான பிரத்யேக திட்டம்

பொதுமக்கள் தங்களது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்றிக்கொள்ளும் வகையில் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை அரசு, அஞ்சலகங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் சுகன்யா சம்ரித்தி யோஜனா. இந்த திட்டத்தில், பெண் குழந்தைகளின் பெற்றோர் முதலீடு செய்யலாம்.

இதையும் படிங்க : ஆதார் மட்டும் போதும்… 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை ஈஸியா வாங்கலாம் – எப்படி தெரியுமா?

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயர்களில் இந்த திட்டத்தில் கணக்கு தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் ஆண்டுக்கு ரூ.250 முதல் ரூ.1.5 லட்சம் வரை வரவு வைக்கலாம். அவ்வாறு முதலீடு செய்யும் தொகை பெண் குழந்தையின் 21 வயதில் முதிர்ச்சி அடையும். இந்த முதலீட்டுக்கு வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.

பெண் குழந்தைகளின் 21 வயதுக்கு முன்னரே பணத்தை எடுக்க முடியுமா?

இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்தை பகுதி அளவு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், நினைத்த நேரத்திற்கு பணத்தை எடுக்க முடியாது. பெண் குழந்தை 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும்போதோ அல்லது 18 வயதை தாண்டும்போதோ 50 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை இப்போது மாற்ற முடியுமா? மத்திய அரசு விளக்கம்

பெண் குழந்தைகளின் படிப்புக்கு உதவும் வழகையில் இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்றபடி மீதமுள்ள பணத்தை அந்த பெண் குழந்தைக்கு 21 வயது நிறைவடைந்த பிறகே எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us