AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கார் லோன் வாங்கப்போறீங்களா? குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் – தேர்வு செய்வது எப்படி?

Car Loan Guide : கார்கள் விலை அதிகம் என்பதால் ஒரு நடுத்தர குடும்பத்தினரால் அதனை அவ்வளவு எளிதாக வாங்க முடிவதில்லை.. அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் பல்வேறு வங்கிகள் கார் லோன் வழங்குகின்றன.அவற்றில் சிறந்தவற்றை தேர்ந்தெடுப்பது எப்படி என பார்க்கலாம்.

கார் லோன் வாங்கப்போறீங்களா? குறைந்த வட்டி வழங்கும் வங்கிகள் – தேர்வு செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Apr 2026 19:23 PM IST

கார் என்பது ஆடம்பரம் என்பதைக் கடந்து அடிப்படை தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குடும்பத்துடன் பயணிக்க, அவசர காலங்களில் பேருந்தை எதிர்பார்க்காமல் விரைவாக செல்ல என கார்கள் மிகவும் அத்தியாவசியமாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கார் வாங்குவது என்பது பலரின் கனவாக இருந்தாலும், அதிக விலை காரணமாக பலரும் தயங்குகின்றனர். அவர்களுக்கு கார் லோன் சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக எலக்ட்ரிக் கார்களுக்கு மத்திய அரசு தொடர்ந்து மானியங்கள் வழங்குவதால், கார் லோன்களுக்கான தேவை தற்போது எப்போது இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.

கார்கள் விலை அதிகம் என்பதால் ஒரு நடுத்தர குடும்பத்தினரால் அதனை அவ்வளவு எளிதாக வாங்க முடிவதில்லை. காரணம் காரின் விலை லட்சக்கணக்கில் இருக்கும் என்பதால் அனைவராலும் பெரும் தொகை கொடுத்து கார் வாங்க முடியாது. அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் பல்வேறு வங்கிகள் கார் லோன் வழங்குகின்றன. அதற்கான கடனை மாதத் தவணை மூலம் செலுத்த முடியும் என்பதால் இந்த திட்டம் பலருக்கும் கைகொடுக்கிறது.

இதையும் படிக்க : EPFO: யுபிஐ மூலம் எவ்வளவு பிஎஃப் தொகையை பெறலாம் ? வெளியான முக்கிய அப்டேட்

இந்த நிலையில் இந்தியாவில் வங்கிகள் குறைந்த வட்டியில் கார் லோன் வழங்கும் வங்கிகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். பயனர்கள் அதனை ஒப்பிட்டு தங்களுக்கு தேவையான வங்கிகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இந்தியாவில் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கார் கடன்களை வழங்குகின்றன.

கார் லோனுக்கு சிறந்த வட்டி வழங்கும் வங்கிகள்

  • யூனியன் பேங்க்கை பொறுத்தவரை 7.40 சதவிகிதம் முதல் 9.45 சதவிகிதம் வட்டியுடன் கடன் வழங்குகிறது.
  • பஞ்சாப் நேஷனல் வங்கியை பொறுத்தவரை 7.60 சதவிகிதம் முதல் 10.70 சதவிகித வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது.
  • பேங்க் ஆஃப் பரோடா வங்கியை பொறுத்தவரை 7.60 சதவிகிதம் முதல் 11.35 சதவிகித வட்டியுடன் கடன் வழங்குகிறது.
  • ஸ்டேட் பேங்க்கை பொறுத்தவரை 8.70 சதவிகிதம் முதல் 9.85 சதவிகிதம் வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது.
  • எச்டிஎஃப்சி வங்கியை பொறுத்தவரை 8.50 சதவிகிதம் முதல் வட்டியுடன் கடன் வழங்குகிறது.

இதில் சில வங்கிகள் பிராசசிங் கட்டணத்தையும் பெறுகின்றன. சென்டரல் பேங்க் ஆஃப் இந்தியா என்ற வங்கி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிராசசிங் கட்டணம் இல்லாமல் கடன் வழங்குகிறது. கார் லோன் வாங்கும்போது பிராசசிங் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் வசூலிக்கின்றனவா என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இதையும் படிக்க : மாத செலவுகளை Manage செய்ய முதன்மை பட்ஜெட்.. இப்படி பண்ணா சிக்கல் இல்லை!

மாதத் தவணை எப்படி இருக்கும்?

உதாரணமாக ரூ. 5 லட்சம் கடனை 5 ஆண்டுகளுக்கு நீங்கள் வாங்கியிருந்தால் மாதத் தவணையாக ரூ. 9,900 முதல் ரூ. 11,200 மாதத் தவணை செலுத்த வேண்டியிருக்கும். வங்கிகள் வழங்கும் வட்டி விகிதத்த பொறுத்து மாதத் தவணை மாறும். கார் லோன் எடுக்கும் முன் வட்டி விகிதம், பிராசசிங் கட்டணம், கடன் காலம், கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை கருத்தில் கொள்வது நல்லது.

Follow Us