EPFO: யுபிஐ மூலம் எவ்வளவு பிஎஃப் தொகையை பெறலாம் ? வெளியான முக்கிய அப்டேட்
EPFO 3.0 : மாத சம்பளம் வாங்குபவர்களை பொறுத்தவரை பிஎஃப் தொகையை பெருவது என்பது பெரும் சவாலான பணியாகவே இருந்து வருகிறது. அதனை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு இபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எவ்வளவு வரம்பு என்பது குறித்து பார்க்கலாம்.
மாத சம்பளம் வாங்குபவர்களை பொறுத்தவரை பிஎஃப் தொகையை பெருவது என்பது பெரும் சவாலான பணியாகவே இருந்து வருகிறது. அதனை எளிமையாக்கும் வகையில் மத்திய அரசு இபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி பிஎஃப் தொகையை பெறுவது என்பது மிகவும் எளிது. குறிப்பாக டிஜிட்டல் முறையில் ஈபிஎஃப்ஓ 3.0 திட்டத்தை அறிமுகப்படுத்தபவுள்ளது. அதன்படி ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை பெறும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பணத்தை எடுக்க நீண்ட நேரம் காத்திருக்க தேவையில்லை. இனி உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து நேரடியாக ஏடிஎம் அல்லது யுபிஐ மூலம் எடுத்துக்கொள்ளளாம். அதற்கான செயல்முறையும் மிக எளிது.
பிஎஃப் நிதியை திரும்ப பெறுவதில் மிக முக்கிய மாற்றம்
இபிஎஃப்ஓ பிஎஃப் செயல்முறையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றும் வகையில் இபிஎஃப்ஓ 3.0 என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அப்டேட் மூலம் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்கள், வங்கி சேவைகள் போன்று உடனுக்குடன் பணம் எடுப்பது போன்ற செயல்முறைகளை இதை எளிதாக்குகிறது. முன்பு பிஎஃப் தொகையைப் பெற ஆன்லைனிலோ அல்லது அலுவலகங்களுக்கோ சென்று பல படிவங்களை நிரப்ப வேண்டியிருந்தது.
இதையும் படிக்க : யுபிஐ செயலியில் பணம் காணாமல் போவதை கவனித்திருக்கிறீர்களா? இதுதான் காரணம் – எப்படி தவிர்ப்பது?
மேலும், இதற்கான ஒப்புதலுக்காக பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது அறிமுகமாகும் புதிய முறையின் மூலம் இந்த முழு செயல்முறைும் மிக எளிமையாகவும் வெளிப்படையாகவும் மாற்றப்படுகிறது. இதன் மூலம் அவசர காலங்களில் பிஎஃப் தொகையை பெற இனி வாரக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது.
இந்த புதிய முறையின் மூலம் உங்கள் அனைத்து பிஎஃப் பரிவர்த்தனைகளும் மிக எளிமையாக நடைபெறும். அதன் படி இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பிஎஃப் ஏடிஎம் கார்டு வழங்க திட்டமிட்டு வருகிறது. இந்த கார்டு வழங்கப்பட்டது. இந்த கார்டு மூலம் வழக்கமாக வங்கி ஏடிஎம் கார்டு போல, நம் தேவைப்படும் நேரம் ஏடிஎம் மூலம் நம் பணத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியும்.
இதையும் படிக்க : யுபிஐ மூலம் பணம் அனுப்புவதால் சிபில் ஸ்கோர் பாதிக்குமா? உண்மை என்ன?
அகே போல நம் பிஎஃப் கணக்கை யுபிஐ உடன் இணைப்பதற்கான வசதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தற்போதுள்ள இபிஎஃப்ஓ இணையதளம் மற்றும் UMANG செயலி மூலம் வங்கி கணக்கிற்கு நம் பிஎஃப் தொகையை மாற்றும் வசதி இனி வரும் காலங்களில் இன்னும் எளிமையாக மாற்றப்படவுள்ளது.
உங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து எவ்வளவு தொகையை பெறலாம்?
தற்போது வெளியான தகவலின் படி ஏடிஎம் அல்லது யுபிஐ மூலம் பிஎஃப் தொகையை திரும்ப பெற இபிஎஃப்ஓ ஒரு குறிப்பிட்ட வரம்பை நிர்ணயித்துள்ளது. அதன் படி ஒவ்வொரு பிஎஃப் கணக்கில் இருந்து 50 முதல் 75 சவதிகிதம் வரையில் மட்டுமே நம் பெற முடியும். ஆனால் வரும் காலங்களில் இந்த விகிதம் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.



