AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இபிஎஃப்ஓவில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.10,900 கோடி.. உங்கள் பணத்தை எடுக்க இது கட்டாயம்!

Employee Provident Fund Organization | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எடுக்காமலே உள்ளனர். இந்த நிலையில், இபிஎஃப்ஓவில் கேட்பாரற்று கிடைக்கும் பணத்தின் அளவு ரூ.10,900 கோடியாக உயர்ந்துள்ளதாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இபிஎஃப்ஓவில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.10,900 கோடி.. உங்கள் பணத்தை எடுக்க இது கட்டாயம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Apr 2026 11:48 AM IST

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியர் துறை ஊழியர்களுக்கான வர பிரசாதமாக உள்ள திட்டம் தான் இந்த ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization). இந்த அமைச்சகத்தின் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் துறை ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்படும். இந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு மாதம் மாதம் வரவு வைக்கப்படும். இந்த மாதம் மாதம் வரவு வைப்படும் பணத்திற்கான வட்டியையும் அரசு வழங்குகிறது.

ஊழியர்களின் ஓய்வு காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், பணியின்போதே ஊழியர்கள் தங்களுக்கு நிதி தேவை ஏற்படும் பட்சத்தில் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலான பிஎஃப் கணக்குகளில் பணம் எடுக்கப்படாமலே உள்ளது. அதாவது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் க்ளெய்ம் செய்யப்படாத பணத்தின் அளவு ரூ.10,900 கோடியாக அதிகரித்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப்ஓவில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.10,900 கோடி

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்கள் திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல் உள்ளிட்ட தேவைகளுக்காக பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், சில ஊழியர்கள் தங்களது பணத்தை எடுத்துக்கொள்கின்றனர். ஆனால், சில ஊழியர்கள் தங்களது எஃப்ஓ பணத்தை அப்படியே வைத்திருந்து தங்களது ஓய்வு காலத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என நினைப்பர். அதன் காரணமாக அவர்கள் அந்த பணத்தை அப்படியே பிஎஃப் கணக்கில் விட்டுவிவர். இந்த நிலையில், அவ்வாறு கேட்பாரற்று சுமார் ரூ.10,900 கோடி பணம் இருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

இதையும் படிங்க : 60% ஆக உயர்ந்த இந்தியாவின் உள்நாட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி.. மத்திய பெட்ரோலிய துறை தகவல்!

பிஎஃப் பணத்தை எடுப்பது எப்படி?

இபிஎஃப்ஓ கணக்கில் பணம் இருந்து அதனை எடுக்க தெரியாமல் இருக்கிறீர்கள் என்றால், பிஎஃப் பனத்தை எப்படி எடுப்பது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அங்கு ஊழியர் தனது யுஏஎன் (UAN – Universal Account Number) எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட வேண்டும். பிறகு அதில் கொடுப்பட்டு இருக்கும் க்ளெய்ம் அம்சத்தை பயன்படுத்தி பிஎஃப் பணத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

இதையும் படிங்க : வெறும் ரூ.666 முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி சேர்க்கலாம்.. SIP-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!

பிஎஃப் பணத்தை எடுக்க பிஎஃப் கணக்கில் இகேஒய்சி (e KYC – Know Your Customer) மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us