UPI-ல் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டுமா?.. ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
RBI's New Rule For UPI Transaction In Suggestion | ஆன்லைன் மோசடிகளை தடுக்க யுபிஐ செயலிகளில் ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப சுமார் ஒரு மணி நேர இடைவெளி ஏற்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவை பொருத்தவரை பெரும்பாலான பொதுமக்கள் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை ஆன யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். ரூ.1 லட்சம் வரை யுபிஐ மூலம் ஒருவர் பண பரிமாற்றம் செய்ய அனுமதி வழங்கப்படும் நிலையில், அதிகபட்ச தொகையையும் ஒருவருக்கு விரைவாக அனுப்ப முடியும். இவ்வாறு பலரும் ரூ.1 லட்சம் வரை அவசர தேவைகளுக்கு ஜிபே (G Pay), கூகுள் பே (Google Pay) போன்ற யுபிஐ செயலிகள் மூலம் பண பரிமாற்றம் மேற்கொண்டு வரும் நிலையில், பயனர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) வெளியிட்டுள்ளது. அதாவது, ரூ.10,000-க்கு மேல் ஒருவருக்கு யுபிஐ மூலம் பணம் அனுப்ப வேண்டும் என்றால் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ-ல் ரூ.10,000-க்கு மேல் அனுப்ப ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்?
இந்தியாவில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2026 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் ஆன்லைன் மோசடி ரூ.22,000 கோடிகளை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மோசடிகளை தடுக்க ஆர்பிஐ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான் இந்த புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதாவது யுபிஐ மூலம் ஒருவர் மற்றொருவருக்கு ரூ.10,000-க்கு மேல் பணம் அனுப்ப ஒரு மணி நேரம் ஆகும். இந்த ஒரு மணி நேரத்தில் பணம் அனுப்பும் நபர், அதனை தாங்கள் செய்யவில்லை என்றால் கேன்சல் செய்யும் வசதி வழங்கப்படும். இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ள நிலையில், மே 08, 2026 வரை இந்த திட்டம் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொள்ள உள்ளது. அதன் பிறகு இதற்கான வழிமுறைகள் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : EPFO 3.0: யுபிஐ முதல் ஏடிஎம் வரை – பிஎஃப் திட்டத்தில்10 முக்கிய மாற்றங்கள்
இந்த அம்சத்தை அறிமுகம் செய்ய ஆர்பிஐ திட்டமிட்டுள்ளது ஏன்?
பெரும்பாலான மோசடிகள் பொதுமக்களை மிரட்டியோ அவர்களை அவசரப்படுத்தியோ மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஒரு மணி நேரத்தில் பயனர்கள் தாங்கள் மேற்கொண்ட பண பரிவர்த்தனை மோசடிக்கானது என்று உணரும் பட்சத்தில் அதனை கேன்சல் செய்து பணத்தை காப்பாற்ற முடியும் என்று ஆர்பிஐ கூறியுள்ளது. ஆனால், இந்த அம்சம் மூலம் அவசர தேவைகளுக்கு பண அனுப்புவது பாதிக்கப்படும் என்ற சூழல் உருவாகியுள்ள நிலையில், அதற்கான சில விலக்குகளையும் ஆர்பிஐ அறிவித்துள்ளது.
- பயனர்கள் தாங்கள் அடிக்கடி பணம் செலுத்தும், நம்பகமானவர்களின் பட்டியலை தயார் செய்து வைத்துக்கொள்ளலாம். அவர்களுக்கு பணம் அனுப்புவதில் எந்த வித சிக்கலும் ஏற்படாது.
- கடைகளில் அல்லது ஆன்லைனில் ஷாப்பிங், கட்டணம் செலுத்துவது ஆகியவற்றுக்கு இந்த முறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.