கோவையில் பிரிட்ஜ் வெடித்துச் சிதறி பயங்கர தீ விபத்து – விபத்துக்கு காரணம் என்ன?
கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு காரணமாகப் பிரிட்ஜ் வேகத்தில் வெடித்து விபத்தானது ஏற்பட்டது. வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில் பிரிட்ஜில் ஏற்பட்ட பயங்கர ஷார்ட் சர்க்யூட் காரணமாக, கண்ணிமைக்கும் நேரத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்துச் சிதறியது.
கோவை, ரத்தினபுரி பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில், குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட திடீர் மின் கசிவு காரணமாகப் பிரிட்ஜ் வேகத்தில் வெடித்து விபத்தானது ஏற்பட்டது. வீட்டிற்குள் யாரும் இல்லாத நேரத்தில் பிரிட்ஜில் ஏற்பட்ட பயங்கர ஷார்ட் சர்க்யூட் காரணமாக, கண்ணிமைக்கும் நேரத்தில் குளிர்சாதன பெட்டி வெடித்துச் சிதறியதில், வீட்டில் தீ மளமளவெனப் பற்றி எரிந்து ஒட்டுமொத்தக் குடியிருப்பையும் சூழ்ந்து கொண்டது. ஜன்னல் வழியே கரும்புகை வேகத்தில் வெளியேறுவதைக் கண்டு அலறியடித்த அக்கம், பக்கத்தினர், உடனடியாக ரத்தினபுரி காவல் நிலையத்திற்கும், கவுண்டம்பாளையம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குப் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சில மணி நேரம் போராடி, தீ அடுத்தடுத்த வீடுகளுக்குப் பரவாமல் அணைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
