AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆதார் கார்டு – உங்கள் பெயர், பிறந்த தேதியை எத்தனை முறை மாற்றலாம்? மத்திய அரசின் புதிய நிபந்தனைகள்

Aadhaar Update Rules: ஆதார் கார்டில் பிழைகள் இருந்தால், அரசின் திட்டங்கள் நமக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாரில் அப்டேட் செய்வது தொடர்பாக சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். 

ஆதார் கார்டு – உங்கள் பெயர், பிறந்த தேதியை எத்தனை முறை மாற்றலாம்? மத்திய அரசின் புதிய நிபந்தனைகள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Apr 2026 16:22 PM IST

ஆதார் பெற்ற சமயத்தில் அதில் நம் அளிக்கும் விவரங்களில் தவறு ஏற்பட்டிருந்தால் அதனை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். தவறினால் பல்வேறு சிரமங்களை சந்திக்க நேரிடும். ஆதாரில் உள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி விவரங்களும் பிற ஆவணங்களில் உள்ள விவரங்களும் தவறாக இருந்தால் முக்கியமான நேரங்களில் நமக்கு சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.  ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரியாக வைத்திருப்பது அவசியம்.

இன்றைய காலகட்டத்தில் அனைத்து அரசு சார்ந்த பணிகள் மற்றும் நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ஆதாரில் பிழைகள் இருந்தால் அது நமக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாரில் அப்டேட் செய்வது தொடர்பாக சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : இனி அக்கவுண்ட் நம்பரை மாற்றாமல் வங்கியை மட்டும் மாற்றலாம் – ஆர்பிஐயின் புதிய திட்டம்

பெயர் மற்றும் பிறந்த தேதிய எத்தனை மாற்றலாம்?

ஆதார் அட்டைகளில் குறிப்பிடப்பட்டுள்ள பெயர் மற்றும் பிறந்த தேதி தொடர்பாக UIDAI குறிப்பிட்ட நிபந்தனைகளை வகுத்துள்ளது. இந்த விவரங்களை எத்தனை முறை மாற்றியமைக்கலாம் என்பதற்கு அது வரம்புகளை விதித்துள்ளது. அதற்கு காரணம் என்னவென்றால், நீங்கள் விரும்பும் போதெல்லாம் அவற்றை மாற்றிக்கொண்டே இருக்க அனுமதிக்கப்பட்டால், அது வேறு யாரும் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது என்பதால் தான்.

குறிப்பாக, பெயரை இரண்டு முறை மட்டுமே மாற்ற முடியும். பிறந்த தேதியைப் பொறுத்தவரை, அதை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும். இந்தச் செயல்முறையை நெறிப்படுத்த UIDAI இந்த விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.

  • அந்த விதிகளின் படி ஒருவரின் வாழ்நாளில் பெயரை இரண்டு முறை மட்டுமே மாற்ற முடியும்.
  • பிறந்த தேதியை ஒரு முறை மட்டுமே மாற்ற முடியும்.
  • பாலின விவரத்தை ஒரு முறை மட்டுமே புதுப்பிக்க முடியும்.
  • முகவரியை எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்; இது தொடர்பாக எவ்வித வரம்புகளும் விதிக்கப்படவில்லை.

இதையும் படிக்க : இனி இந்த பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு கட்டாம்.. பான் கார்டு விண்ணப்பத்திலும் மாற்றம்!

நமக்கு விதிக்கப்பட்ட வரம்புகளுக்கு பிறகு உங்கள் விவரங்கள மாற்றியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அதற்கு நாம் ஆதார் மண்டல அலுவலககத்தை தொடர்பு கொண்டு, மாற்ற வேண்டியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டியிருக்கும். இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உங்கள் கோரிக்கையை முழுமையாக ஆய்வு செய்து, உங்கள் கோரிக்கையில் நியாயம் இருக்கும்பட்சத்தில் மாற்றிக்கொள்ள அனுமதிப்பார்.

ஆனால் நம் ஆதார் கார்டில் மாற்ற செய்ய அதற்கு சரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும். இதற்கு ஆதார் மண்டல அதிகாரிகளை மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாலம். அதனால் நம் ஆதார் கார்டில் விவரங்களை மாற்றம் செய்வதற்கு முன் ஒரு முறைக்கு இருமுறை சரியாக பார்ப்பது மிகவும் அவசியம்.

 

Follow Us