AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிபிஎஃப் திட்டத்தின் மீது குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.. அதற்கு முன்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!

Loan Public Provident Fund Scheme | அரசு அஞ்சலகங்கள் மூலம் வழங்கும் முக்கிய திட்டமாக பொது வருங்கால வைப்பு நிதி உள்ளது. இந்த நிலையில், பொது வருங்கால வைப்பு நிதி முதலீட்டின் மீது கடன் வாங்குவதற்கான நடைமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிபிஎஃப் திட்டத்தின் மீது குறைந்த வட்டியில் கடன் பெறலாம்.. அதற்கு முன்பு இவற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Apr 2026 21:17 PM IST

அரசு அஞ்சலகங்கள் மூலம் ஏராளமான சேமிப்பு மற்று முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் (PPF – Public Provident Fund Scheme). இந்த திட்டம் எதிர்காலத்தை பாதுகாக்க சேமிப்பது மட்டுமன்றி, நிகழ் காலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளவும் மிகவும் உதவியாக இருக்கும். அதாவது, நீங்கள் மேற்கொள்ளும் பிபிஎஃப் முதலீட்டின் மேல் கடன் வாங்கிக்கொள்ள முடியும். இந்த நிலையில், பிபிஎஃப் திட்டத்தின் மேல் கடன் வாங்குவது எப்படி, அதற்கு விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பிபிஎஃப் முதலீட்டின் மீது கடன் வாங்கலாம்

உங்களுடைய பிபிஎஃப் முதலீடு உங்களது ஓய்வு காலத்தில் மட்டுமல்ல, நீங்கள் கடினமான சூழல்களை எதிர்க்கொள்ளும்போது பணம் உதவி வழங்கும் அம்சமாகவும் இருக்கும். அதாவது பிணையம் எதுவுமின்றி மிக குறைந்த வட்டி உடன் கடன் வாங்க முடியும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களில் கடன் பெறும்போது அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை உருவாகும். ஆனால், இதற்கு அப்படி எந்த ஒரு சிக்கலும் இருக்காது. குறைந்த வட்டியில் கடனை பெற்று நிதி தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள முடியும். இந்த பிபிஎஃப் கடன் பெறுவதற்கு சில முக்கிய காலக்கெடுக்கள் மற்றும் விதிமுறைகள் கட்டாயமாக உள்ளன.

இதையும் படிங்க : அரசின் சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க!

பிபிஎஃப் முதலீட்டின் மீது கடன் பெறுவது எப்படி?

நீங்கள் பிபிஎஃப் கணக்கில் முதலீடு செய்ய தொடங்கிய மூன்று முதல் 6வது நிதியாண்டு வரை மட்டுமே உங்களால் கடன் பெற முடியும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் அனைவருக்கும் கடன் வசதி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் நபர்கள், முதலீடு செய்த பணத்தை முன்கூட்டியே எடுப்பதற்கு முன்னதாகவே இந்த கடன் வசதியை பயன்படுத்தி பணம் பெறலாம்.

இதையும் படிங்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி உயர்வு?

அவ்வாறு நீங்கள் பிபிஎஃப் முதலீட்டின் மீது கடன் பெற விரும்பினால், உங்களது கணக்கு இருக்கும் வங்கி கிளை அல்லது அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டும். அதில் உங்களுடைய பிபிஎஃப் கணக்கு எண், உங்களுக்கு தேவையான கடன் தொகை, பிபிஎஃப் பாஸ்புக் நகல் உள்ளிட்டவற்றை சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். 6வது ஆண்டிற்குள் இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்திவீட்டீர்கள் என்றால் மீண்டும் ஒருமுறையும் கடன் வாங்கிக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us