மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி உயர்வு?
Dearness Allowance Hike For Central Government Employees | மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு ஆண்டுக்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
அரசு ஊழியர்களுக்கான மிக முக்கிய அம்சமாக அகவிலைப்படி உயர்வு (DA – Dearness Allowance) உள்ளது. பணியில் உள்ள உழியர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்றவர்கள் என அனைவருக்கும் இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2026 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி மார்ச் மாதத்திலேயே அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில நிர்வாக காரணங்களால் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட வேண்டிய அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் மாதம் முதல் வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அகவிலைப்படி உயர்வு என்றால் என்ன?
மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் விலைவாசி உயர்வு, பண வீக்கத்துக்கு ஏற்ப தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள அரசு வழங்கும் அம்சம் தான் அகவிலைப்படி உயர்வு. ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்திற்கு ஒருமுறையும், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் ஒருமுறையும் உயர்த்தி வழங்கப்படும். இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி உயர்வு குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : வேலையில் இருந்து விலக போறீங்களா? அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க




மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எவ்வளவு?
மத்திய அரசு, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 3 சதவீதம், 4 சதவீதம் என வழங்கி வருகிறது. இதுவரை அதிகபட்சமாக 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வை வழங்கியுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்தில் 3 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் பட்சத்தில் அகவிலைப்படி 53 அல்லது 54 என்ற அளவை எட்ட உள்ளது. காரணம், கடைசி முறை அரசு அகவிலைப்படி உயர்வை அறிவித்தபோது அகவிலைப்படி மொத்த அளவு 50 சதவீதமாக இருந்தது.
இதையும் படிங்க : 60 வயதில் எடுத்த முக்கிய முடிவு… இன்று 93 வயதில் இந்தியாவின் கோடீஸ்வரர்களில் ஒருவர் – யார் இந்த இவர்?
ஏப்ரல் முதல் வாரத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் கூறப்படும் நிலையில், ஏப்ரல் 06, 2026 அன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் பட்சத்தில் ஊழியர்களின் மாத ஊதியத்திலும், ஓய்வு பெற்றவர்களின் பென்ஷன் தொகையிலும் உயர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.