AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டிரெண்டாகும் ஒரு வார விதி – ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும் – என்ன செய்ய வேண்டும்?

தற்போது தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்த ஒன் வீக் ரூல். பெரிதும் உதவுவதாக பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகினறனர். இந்த விதியின்படி. தேவையில்லாத பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றும் போது உடனே வாங்காமல், ஒரு வாரம் காத்திருக்க வேண்டும்

டிரெண்டாகும் ஒரு வார விதி  – ரூ.1 லட்சம் வரை சேமிக்க முடியும் –  என்ன செய்ய வேண்டும்?
One Week Rule
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 03 Apr 2026 15:46 PM IST

இன்றைய வாழ்க்கையில் பலரும் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று  திடீர் செலவுகள்.  ஆன்லைன் சலுகைகள், தள்ளுபடிகள், லிமிடெட் ஆஃபர்கள் போன்றவை பலரை தேவையில்லாத பொருட்களை வாங்கத் தூண்டுகின்றன. குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினர் இந்த பிரச்னையில் அதிகம் பாதிக்க்டுகின்றனர். இது மாத இறுதியில் அவர்களுக்கு பெரும் சுமையாக மாறியிருக்கிறது.  ஆனால், இந்த பிரச்னையை கட்டுப்படுத்த ஒரு எளிய வழிமுறை தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. அதுதான் ஒன் வீக் ரூல் என்கிற ஒருவார திட்டம்.

சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் ஒரு வார விதி

தற்போது தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்த இந்த ஒன் வீக் ரூல். பெரிதும் உதவுவதாக பலரும் தங்களது சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகினறனர். இந்த விதி மிகவும் எளிமையானது. தேவையில்லாத பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றும் போது உடனே வாங்காமல், ஒரு வாரம் காத்திருக்க வேண்டும். அந்த ஒரு வாரம் கழித்தும் அந்த பொருளை வாங்க வேண்டும் என்ற உணர்வு இருந்தால் வாங்கலாம். இல்லையெனில் அதை தவிர்த்து அந்த பணத்தை சேமிக்கலாம்.

இதையும் படிக்க : வீட்டுக்கடனுக்கு வட்டியை தவிர்க்க வேண்டுமா? கைகொடுக்கும் SIP முதலீடு – எப்படி தெரியுமா?

இந்த விதியின் முக்கிய பலன் நாம் சமூக வலைதளங்களில் பார்த்தவுடன் அது தேவையா? அவசியமானதா என யோசிக்காமல்  உணர்ச்சி வசப்பட்டு பொருட்களை வாங்குகிறோம்.  ஆனால் இந்த விதியின் மூலம் நாம் ஒரு வார இடைவேளை விட்டால் அது உண்மையில் தேவையா இல்லையா என்பது நமக்கே தெரிய வரும். இப்படி வாழ்க்கையில் பல பொருட்களை வாங்கி அது பின்னாட்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் சூழ்நிலைகளையும் எதிர்கொண்டு இருப்போம்.

இந்த பழக்கம் நீண்ட காலத்தில் பெரிய சேமிப்பை உருவாக்கும். உதாரணத்துக்கு மாதத்திற்கு ரூ.5,000 அளவுக்கு தேவையற்ற செலவுகளை சமாளித்தால் ஒரு ஆண்டில் ரூ.60,000 வரை சேமிக்க முடியும். இதே 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் ரூ.3 லட்சம் வரை சேமிக்கலாம். மேலும் இவ்வாறு சேமிக்கும் பணத்தை உரிய முறையில் முதலீடு செய்தால் அதன் பலன் இன்னும் அதிகமாகும். வருடத்திற்கு 12 சதவிகிதம் வருமானம் வருவது போன்ற முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ. 4 லட்சத்திற்கு அதிகமாக சேமிக்க முடியும்.

68326

இந்த விதியை தேவைக்கேற்ப மாற்றியும் பயன்படுத்தலாம்.  சிறிய பொருட்களுக்கு 48 மணி நேரமும், நடுத்தர செலவுகளுக்கு ஒரு வாரம் வரையும் பெரிய செலவுகளுக்கு ஒரு மாதம் வரையும் காத்திருக்கும் விதமாக இந்த விதியை மாற்றிக்கொள்ளலாம். ஆனால் இந்த விதி அத்தியாவசிய செலவுகளுக்கு பொருந்தாது. உணவு, மருத்துவம் அல்லது அவசர தேவைகள் போன்றவற்றுக்கு உடனடி முடிவுகள் எடுக்க வேண்டியது அவசியம்.

மொத்தத்தில் இந்த ஒன் வீக் ரூல் விதி என்பது செலவுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காக அல்ல. ஆனால் தேவையில்லாத செலவுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதை தெளிவாக புரிந்து கொண்டு பயன்படுத்தினால் சில மாதங்களிலேயே அதன் பலனை முழுமையாக உணர முடியும்.

Follow Us