AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா – ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு – கட்டணம் எவ்வளவு தெரியுமா?

Sani Peyarchi 2026 : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6, 2026 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. 2026 மார்ச் 6-ம் தேதி சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.

திருநள்ளாறில் சனிப்பெயர்ச்சி விழா – ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு –  கட்டணம் எவ்வளவு தெரியுமா?
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Mar 2026 09:58 AM IST

காரைக்கால், மார்ச் 5 : காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா மார்ச் 6, 2026 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. 2026 மார்ச் 6-ம் தேதி சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார்.  இந்த விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருநள்ளாறு என்ற தலம் ஆன்மீக நம்பிக்கையின் படி,நள சக்கரவர்த்தியின் சனி தோஷம் நீங்கிய புண்ணிய தலமாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு பகவான் சனீஸ்வரர் சன்னதியில் அபயமுத்திரையுடன் காட்சியளித்து வருகிறார். இதனால் ஒவ்வொரு சனிப்பெயர்ச்சி அன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலில் வழிபட்டால் தங்கள் தோஷங்கள் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு திருநள்ளாறில் சிறப்பு ஏற்பாடுகள்

இந்த நிலையில் வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி ஏற்பட்ட சனிப்பெயர்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மார்ச் 6, 2026 அன்று காலை 8.24 மணிக்கு திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற உள்ளன. சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு தரிசன வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிக்க : சனிப்பெயர்ச்சி 2026.. மீன ராசியினருக்கு அடிக்குது ஜாக்பாட்.. அளிக்கொடுக்க வருகிறார் சனி பகவான்..

ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி

மேலும் நளன் தீர்த்தக்குளத்துக்கு செல்லும் வழியில் உள்ள வரிசை வளாகத்தின் மூலம் இலவச தரிசன வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கட்டண தரிசனமாக ரூ.300, ரூ.600 மற்றும் ரூ.1,000 என நிர்ணயம் செய்யப்பட்டு திருநள்ளாறு பகுதியில் பல இடங்களில் டிக்கெட் வழங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பக்தர்கள் சுலபமாக முன்பதிவு செய்யும் வகையில் கோயில் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : சனிப்பெயர்ச்சி 2026.. விருச்சிக ராசியினருக்கு அடிக்குது ஜாக்பாட்.. சொத்துகளை அள்ளிக்கொடுக்கும் பஞ்சம சனி..

சனிப்பெயர்ச்சி நாளான வெள்ளிக்கிழமை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக கோயில் முழு நாளும் திறந்து வைக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்கள் வியாழக்கிழமை இரவு முதலே திருநள்ளாறு நோக்கி வரத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவம், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்ய காவல்துறை சார்பிலும் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

Follow Us