AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்… ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு… 7 நாள்கள் செம என்ஜாய்மெண்ட்!

Goa Special Tourist Train: கோடை காலத்தில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா எத்தனை நாள்கள், உணவு, இருப்பிடம், சுற்றுலா கட்டணம், எந்தெந்த சுற்றுலா இடங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்… ரயில்வேயின் சூப்பர் அறிவிப்பு… 7 நாள்கள் செம என்ஜாய்மெண்ட்!
திருநெல்வேலி டூ கோவா சிறப்பு சுற்றுலா ரயில்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Mar 2026 06:34 AM IST

தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வருகிறது. இதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே, கோடை காலத்தில் கத்தரி வெயிலின் தாக்கமும் அதிகரித்து காணப்படும். இந்த காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். இதன் காரணமாக, ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புவார்கள். அவ்வாறு சுற்றுலா செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் உள்ளூர் சுற்றுலாவும், வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லவும் திட்டமிடுவார்கள். இவர்களுக்காக ரயில்வே நிர்வாகம் சார்பில் சுற்றுலா ரயில்கள் அறிவிக்கப்படும். இதே போல, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பிலும் சிறப்பு சுற்றுலா பேருந்துகள் அறிவிக்கப்பட்டு இயக்கப்படும். இந்த நிலையில், தென்னக ரயில்வே சார்பில் கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

திருநெல்வேலி டூ கோவாவுக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

கோடைகால விடுமுறையையொட்டி, திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து கோவாவுக்கு இயக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ. ஆர். சி. டி. சி. சார்பில் இயக்கப்படும் சிறப்பு சுற்றுலா ரயிலானது திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கி மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் ஆகிய ஊர்களின் வழியாக கோவா சென்றடையும். அதே நேரத்தில் மேற்கண்ட ரயில் நிலையங்களில் இந்த சிறப்பு சுற்றுலா ரயில் ஆனது நின்று செல்லும்.

மேலும் படிக்க: சென்னை வாசிகளே உள்ளூர் சுற்றுலாவுக்கு இங்க போங்க… படகு சவாரிக்கு பக்காவான இடம்!

3 ஏசி வகுப்பில் இருக்கை – 3 ஸ்டார் ஹோட்டலில் அறை ஒதுக்கீடு

இந்த சிறப்பு சுற்றுலா ரயிலானது வருகிற மே 1- தேதி ( வெள்ளிக்கிழமை) புறப்பட்டு மே 7- ஆம் தேதி ( வியாழக்கிழமை) திரும்பி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலில் 3- ஆம் வகுப்பு ஏசியில் இருக்கைகள் ஒதுக்கப்படும். கோவாவில் 3 ஸ்டார் நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி, சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்ப்பதற்கு ஏசி பேருந்து ஆகியவற்றில் அழைத்து செல்லப்பட்டு சுற்றி காண்பிக்கப்படும். பயணம் செய்யும் நாள்களில் காலை, மதியம், இரவு என 3 வேளைகளிலும் உணவு இலவசமாக வழங்கப்படும்.

கோவாவில் சுற்றி காண்பிக்கப்படும் சுற்றுலா தலங்கள்

இதில், கோவாவில் உள்ள தூத் சாகர் நீர்வீழ்ச்சி, கலங்குட் கடற்கரை, ஃபோர்ட் அகுவாடா மற்றும் வடக்கு கோவா சுற்றுலாத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக சுற்றி காண்பிக்கப்படும். 7 நாட்கள் சுற்றுலா பயணத்திற்கு ஒரு நபருக்கு சுற்றுலா கட்டணமாக ரூ. 26,300- இல் இருந்து தொடங்குகிறது. இந்த சுற்றுலாவுக்கு செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் முன்னதாகவே ரயில்வேயில் இணையதளமான www.irctc.co.in -இல் தங்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று ரயில்வே ஐஆர்சிடிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பரந்து விரிந்த தேயிலை தோட்டம்.. மலை பாங்கான நிலப்பரப்பு.. சம்மர் சுற்றுலாவுக்கு இங்க விசிட் அடிங்க!

Follow Us