AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை வாசிகளே உள்ளூர் சுற்றுலாவுக்கு இங்க போங்க… படகு சவாரிக்கு பக்காவான இடம்!

Tiruvottiyur Lake boat House: சென்னை, திருவொற்றியூர் ஏரியில் ரூ.4.62 கோடியில் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு குழாம் நேற்று முதல் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இங்கு, பல்வேறு வகையான படகுகள் உள்ளன. இதற்கான கட்டணங்களும் குறைவாக விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை வாசிகளே உள்ளூர் சுற்றுலாவுக்கு இங்க போங்க… படகு சவாரிக்கு பக்காவான இடம்!
திருவொற்றியூரில் படகு குழாம் திறப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 02 Mar 2026 07:48 AM IST

சென்னையில் பல்வேறு பகுதிகளை மேம்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் சுற்றுலா திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னையில் வசித்து வரும் பொது மக்கள் விடுமுறை நாட்களில் பொழுதை கழிப்பதற்காக அந்தந்த பகுதிகளில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக, குறிப்பிட்ட சில ஏரிகளில் சிரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், படகு குழாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, நகராட்சி நிர்வாக துறை சார்பில் சென்னையில் உள்ள மணலி மற்றும் மாதவரம் ஏரியில் கடந்த சில நாட்களாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பணிகள் முடிவடைந்ததை அடுத்து, இந்த இரு ஏரிகளிலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக பல்வேறு வகையான படகுகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

திருவொற்றியூர் ஏரியில் படகு குழாம்

இதில், தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் ஏரிகளுக்கு வருகை தருவதுடன், இந்த படகுகளில் சவாரி செய்து வருகின்றனர். மணலி மற்றும் மாதவரம் ஏரிகளில் படகு குழாம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல, திருவொற்றியூர் மண்டலத்திலும் புதிதாக படகு குழாம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. அதன்படி, இதற்கான ஆய்வுகளை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, திருவொற்றியூர் அன்னை சிவகாமி நகரில் 20.17 ஏக்கரில் புதிதாக ஏரி அமைக்கப்பட்டது.

மேலும் படிக்க: “கீச் கீச்” என சத்தமிடும் காட்டு பறவைகள்.. திகிலூட்டும் ஜங்கில் சவாரி.. டாப்பான டாப்சிலிப்.. ஒரு முறை போயி பாருங்க!

திருவொற்றியூர் ஏரியில் ரூ.4.62 கோடியில் படகு குழாம்

இதைத் தொடர்ந்து, ரூ.4.62 கோடியில் படகு குழாம் அமைக்கப்பட்டது. இங்கு, அழகிய வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ள நுழைவு வாயில்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நுழைவாயில், சுற்றுலா பயணிகள் காத்திருப்பு அறை, படகு சவாரிக்கான டிக்கெட் வழங்கும் கவுண்ட்டர், உணவகங்கள், ஆண்கள் மற்றும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறைகள், பொது மக்கள் அமருவதற்கான இருக்கைககள், நடைபயிற்சி செல்வதற்கான சாலைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.

திருவொற்றியூரில் என்னென்ன படகுகள் உள்ளன

இதே போல, முதலுதவி அறை, மீட்பு நடவடிக்கை வசதிகள், படகு சவாரிக்கான பல்வேறு வகையான படகுகள், குடிநீர் வசதி, கம்பிகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சுவர், மின் விளக்கு வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு குழாமில் 2 அக்வா ரோலர், 2 இருக்கை கயாக், 3 அக்வா ஜோர்பிங், 1 வாட்டர் ஸ்கூட்டர், 1 இருக்கை கயாக், 2 இருக்கை மிதிப்படகு, 4 இருக்கை மிதிப்படகு ஆகியவை உள்ளன. இதற்கான கட்டணங்கள் குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த படகு குழாமை பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா திறந்து வைத்தார்.

மேலும் படிக்க: குளிர்ச்சியான மலை பிரதேசம்.. கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்.. 3500 அடி உயரத்தில் ரம்மியமாக காட்சியளிக்கும் சுற்றுலா தலம்!

Follow Us