AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை நிலவரம் இதோ..

Weather Forecast: இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதோடு, மார்ச் 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கும்.. மழையும் இருக்கு.. வானிலை நிலவரம் இதோ..
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Mar 2026 06:29 AM IST

சென்னை, மார்ச் 02: தமிழகத்தில் கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகச் சில மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில், தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியல் உயர்ந்தும் ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் காணப்பட்டது. குறிப்பாக நேற்றைய தினம் மேற்குதொடர்சி மலை மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. தமிழகத்தில் இதர பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. அதோடு, அதிகாலை வேளை பனிமூட்டம் நிலவியது. கடந்த 2 நாட்களாக சென்னையில் கூட காலை 8 மணி வரை கடும் பனிமூட்டம் இருந்தது.

மேலும் படிக்க: “அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!

இன்று மழைக்கு வாய்ப்பு:

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், “குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள் அதேபோல, லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும் (மார்ச் 2), நாளையும் (மார்ச் 3) வரை, மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மார்ச் 4 முதல் மழைக்கு வாய்ப்பு:

மார்ச் 4ம் தேதி அன்று தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல, மார்ச் 7ம் தேதி வரை தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

அதிகாலை பனி, வெப்பநிலை உயர்வு:

தொடர்ந்து, இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதோடு, மார்ச் 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

அதேசமயம், மார்ச் 5ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தகுதி இருந்தும் அரசின் இலவச லேப்டாப் கிடைக்கவில்லையா?.. விண்ணப்பிப்பது எப்படி?

சென்னை வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us