AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!

Vijay - Sangeetha divorce case: மேலும், தேவைப்பட்டால், நடிகையுடன் விஜய் இருக்கும் ஆதாரங்களையும் தரத் தயார் என்றும் குறிப்பிட்டு, தனக்கு விவாகரத்து பெற்று தருவதோடு, அவரது சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படியும் சங்கீதா விவாகரத்து மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

“அரசியலுக்கு வந்தால் தனிப்பட்ட வாழ்க்கையை தோண்டுவார்கள்”.. விஜய் குறித்து அண்ணாமலை பேச்சு!!
விஜய், அண்ணாமலை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Feb 2026 10:29 AM IST

சென்னை, பிப்ரவரி 28: கணவருக்கும், மனைவிக்கும் எங்கே இருந்தாலும் சந்தோஷம், அமைதி கிடைக்கட்டும் என விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். தவெக தலைவரும், நடிகருமான விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள சம்பவம் தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அந்த மனுவில் விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். விஜய்க்கு நடிகையுடன் தொடர்புள்ளதாகவும், அந்த தொடர்பு தனக்கு 2021ம் ஆண்டு தெரியவந்ததாகவும், அதனை தான் கண்டித்ததும், தொடர்பை நிறுத்திக்கொள்வதாக விஜய் உறுதியளித்துள்ளார். எனினும், அவர் மீண்டும் நடிகையுடன் தொடர்பில் இருந்து வந்ததும், இதைப் பற்றி கேள்வி எழுப்பியதால், தனது உரிமைகளை பரித்ததாகவும், தனது பொருளாதார சுதந்திரத்தை முடக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: முடிவுக்கு வரும் தந்தை மகன் மோதல்? ராமதாஸ் தலைமையில் இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

நடிகையுடன் இருக்கும் ஆதாரத்தை தரத் தயார்:

அதோடு, அந்த நடிகை அடிக்கடி சமூக வலைதளங்களில் விஜய்யுடன் இருக்கும் படங்களை பதிவிட்டதாகவும், அவர்கள் இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று சுற்றி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனால், தங்களது குடும்ப நிம்மதி சீர்குலைந்ததாகவும், தனக்கும், குழந்தைகளுக்கும் கடும் மன அழுத்தம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தேவைப்பட்டால், நடிகையுடன் விஜய் இருக்கும் ஆதாரங்களையும் தரத் தயார் என்றும் குறிப்பிட்டு, தனக்கு விவாகரத்து பெற்று தருவதோடு, அவரது சமூக அந்தஸ்துக்கு ஏற்ப ஜீவனாம்சம் பெற்றுத் தரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார்.

விஜய் – சங்கீதா விவாகரத்து விவாகரம்:

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் விஜய் – சங்கீதா விவாகரத்து விவாகரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், விஜய் மனைவி டிசம்பர் மாதம் விவாகரத்துக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்றைக்கு அது வெளியே வந்திருக்கிறது. நான் எப்பொழுதும் சொல்வது தான். இது, நடிகர் விஜய், அவருடைய மனைவி மற்றும் நீதிமன்றம் இந்த மூன்று பேருக்கு இடையே உள்ள பிரச்சனையாக தான் நான் பார்க்கிறேன்.

விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை:

இதனை ஒரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையாக பார்க்கிறேன். விஜய்யின் அரசியல் கருத்துக்கு நான் எப்பொழுதும் பதில் சொல்ல தயாராக இருக்கிறேன். இது தனிப்பட்ட வாழ்க்கை. கணவருக்கும், மனைவிக்கும் எங்கே இருந்தாலும் சந்தோஷம், அமைதி கிடைக்கட்டும். அதனால் அரசியல் ரீதியாக நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. விஜய், மனைவி, நீதிமன்றம் இடையே நடக்கும் பிரச்சனையை நான் அரசியல் படுத்த விரும்பவில்லை என்றார்.

எல்லா தலைவர்களுக்கும் இருந்தது தான்:

அரசியலுக்கு வந்து விட்டோம் என்றால் தீப்பந்தத்திற்குள் ஒரு மனிதன் போய்விட்டு வெளியே வருகிற மாதிரி தான். அதுவரை தோண்டப்படாத உங்களது தனிப்பட்ட வாழ்க்கை எல்லாம் அரசியலுக்கு வந்த பிறகு தோண்டுவார்கள். இது எல்லா தலைவர்களுக்கும் இருந்தது தான். அது விஜய் அவர்களுக்கும் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வரும்போது இதையெல்லாம் உணர்ந்துதான் வந்து இருப்பார் என்று நான் நினைக்கிறேன். இதை கடந்து தான் போக வேண்டும். இதனை தாண்டி தான் அவருடைய அரசியல் இருக்கிறது. இதையெல்லாம் பார்த்து தான் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்வார்களா, ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்பதை இந்த தேர்தல் முடிவு செய்யும்.

வீட்டில் நிம்மதியாக இருந்திருக்கலாம்:

ஒரு சினிமா நடிகராக வீட்டில் நிம்மதியாக இருந்திருக்கலாம், நட்சத்திர மதிப்போடு இருந்திருக்கலாம். கையை தூக்கி காட்டினால் ஒரு லட்சம் பேர் வந்து ஆரவாரம் செய்யலாம். சிரஞ்சீவிக்கு ஏற்பட்டது தான். எத்தனையோ பெரிய நடிகர்கள் அரசியல் களத்திற்கு வந்த பிறகு அழுத்தத்துடன் தான் அவர்கள் வெளியே வர வேண்டும். இது எம்ஜிஆருக்கும் ஆரம்ப காலத்தில் இருந்தது. அதனால் இதை பாசிடிவ், நெகடிவ் என்று நான் சொல்ல விரும்பவில்லை.

மேலும் படிக்க: காங்கிரஸ் கேட்கும் 35 இடங்கள்.. இன்று நடக்கும் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..

விஜய் இதனை கடந்து போக வேண்டும்:

விஜய் இதனை கடந்து போக வேண்டும். இதற்கான விலையை கொடுக்க வேண்டும். இதற்காகன நியாய, தர்மத்தை தாண்டி தான் பயணம் செய்ய வேண்டும். அதனால் இதனை ஒரு தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனையாக நான் பார்க்கிறேன். இதில் நான் இந்த நேரத்தில் ஒரு தனிப்பட்ட மனிதனைப் பற்றி விமர்சனத்தை வைத்து அதை நாகரிகமாகவோ, அரசியலாக்கவோ நான் விரும்பவில்லை. என்னுடைய அரசியல் அப்படிப்பட அரசியல் கிடையாது என்று அவர் கூறினார்.

Follow Us