AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய் தலையில் இடியை இறக்கிய சங்கீதா… நீதிமன்றத்தில் மனு தாக்கல்… பகீர் தகவல்!

tvk leader Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யிடம் விவாகரத்து கோரி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் அவரது மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பல்வேறு முக்கிய காரணங்களை அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் தலையில் இடியை இறக்கிய சங்கீதா… நீதிமன்றத்தில் மனு தாக்கல்… பகீர் தகவல்!
விஜயிடம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த சங்கீதா
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 27 Feb 2026 21:39 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கடந்த 2 ஆண்டுகளாக விஜய் பிரிந்து வாழ்ந்து வருவதால் விவாகரத்து கோருவதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த 1999- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25- ஆம் தேதி அப்போது நடிகராக இருந்த விஜய்க்கும், அவரது ரசிகையான சங்கீதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சுமார் 27 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்குப் பிறகு விஜயிடம், சங்கீதா விவாகரத்து கேட்டுள்ளார். இது தொடர்பாக, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 24- ஆம் தேதி ( செவ்வாய்க்கிழமை ) மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், கடந்த 2 ஆண்டுகளாக விஜய்யிடம் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறேன். இதனால், எனக்கு விஜயிடம் இருந்து விவாகரத்து தேவைப்படுகிறது எனவும், ஜீவனாம்சம் வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: தானியங்கி முறையில் கட்டணம்.. டோல்கேட்டுகளில் அதிநவீன கேமரா பொருத்த திட்டம்..

லண்டனில் பதிவு செய்யப்பட்ட விஜய் திருமணம்

மேலும், கடந்த 1998- ஆம் ஆண்டு ஜூலை மாதம் 10- ஆம் தேதி லண்டனில் எங்களது திருமணம் முதலில் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னையில் 1999- ஆம் ஆண்டு இந்து முறைப்படி எங்களது திருமணம் ராஜா முத்தையா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சங்கீதாவின் படிப்பு விவரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் விஜய் இருந்து வந்தார். திருமணத்தை மீறிய உறவை தட்டி கேட்டதால் வீட்டில் எனக்கான உரிமைகளை விஜய் நிறுத்திவிட்டார்.

Sangeetha Divorce Case

சங்கீதா விவாகரத்து வழக்கு

நடிகையுடன் திருமணம் மீறிய உறவில் விஜய்

எனக்கு நெருக்கடி ஏற்படும் சூழ்நிலையில் நடிகைக்கும் எனது கணவருக்கும் உள்ள உறவை வெளிப்படுத்தும் ஆவணங்களை வழங்கும் என்பன உள்ளிட்ட அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.கடந்த 2 ஆண்டுகளாக விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 20- ஆம் தேதி ( வெள்ளிக்கிழமை) சென்னை உயர்நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார்.

ஏப்ரல் 20- ஆம் தேதி நேரில் ஆஜராகும் விஜய்

அந்த மனுவில் இந்து திருமண சிறப்பு சட்டம் 27 பிரிவு 1- இன் கீழ், 27 பிரிவு ஏ 1 பி- இன் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் மாற்றி உள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 20- ஆம் தேதி ( திங்கள் கிழமை) விசாரணைக்கு வர உள்ளது. இந்த விசாரணையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, குடும்ப நல நீதிபதி சுஜாதா முன்னிலையில் விஜய் ஆஜராக உள்ளார்.

மேலும் படிக்க: படிக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்த 8ம் வகுப்பு மாணவன்.. பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..

Follow Us