AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நெருங்கும் தேர்தல்… வருமான வரித்துறைக்கு “கீ” கொடுத்த தேர்தல் ஆணையம்!

Tamil Nadu Election : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் தொடர்பான செலவினங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அதிகளவு பணம் கொண்டு செல்வதை தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும், இதற்காக கட்டுப்பாட்டு அறையும் வருமான வரித்துறை அமைத்துள்ளது.

நெருங்கும் தேர்தல்… வருமான வரித்துறைக்கு “கீ” கொடுத்த தேர்தல் ஆணையம்!
வருமான வரித்துறைக்கு கீ கொடுத்த தேர்தல் ஆணையம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 27 Feb 2026 14:39 PM IST

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் அல்லது மே மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பான ஆலோசனை ஆகியவற்றை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதுடன் தேர்தல் தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர், காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து, தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 2 அல்லது 3 வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தல் தொடர்பான செலவினங்களை கண்காணிக்க உத்தரவு

இவ்வாறாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் வருமான வரி இயக்குனரகத்தில் தேர்தல் தொடர்பான செலவினங்களை கண்காணிப்பதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் நிலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதற்காக அரசியல் கட்சியினர் மொத்தமாக ஓரிடத்தில் இருந்து, மற்றொரு இடத்துக்கு பணத்தை எடுத்து செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

மேலும் படிக்க: படிக்காமல் நண்பர்களுடன் சுற்றி வந்த 8ம் வகுப்பு மாணவன்.. பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவு..

வருமான வரித்துறை கட்டுப்பாட்டு அறை திறப்பு

இது தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்கும் வகையில், 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வருமான வரித்துறை அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வது, பரிசுப் பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவை தொடர்பாக பொது மக்கள் 1800-425-6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். மேலும், 94453-94453 என்ற வாட்ஸ்- ஆப் எண்ணிலும் இது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.

இணையதளத்தில் புகார் அளிக்கும் வசதி

மேலும், tn.electioncomplaints2026@incometax.go.in- என்ற இணையதளத்திலும் தங்களது புகார்களை பதிவு செய்யலாம் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். இந்த விதிகள் அமலான பின்னர் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தேர்தல் விதிகளை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். இந்த விதிகளை மீறி ஏதேனும் பரிசு பொருள்கள் உள்ளிட்டவை கொண்டு செல்லப்பட்டால் அவற்றை வருமான வரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தானியங்கி முறையில் கட்டணம்.. டோல்கேட்டுகளில் அதிநவீன கேமரா பொருத்த திட்டம்..

Follow Us