AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுக vs அதிமுக.. அதிமுக ஆட்சியுடன் விலைவாசி உயர்வை ஓப்பிட்டு இபிஎஸ் விமர்சனம்..

திமுக 525 வாக்குறுதி கொடுத்தது. 4ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றியதாகச் சொல்கிறார். விலைவாசி உயர்வை எண்ணிப் பாருங்கள். அதிமுக ஆட்சியை ஒப்பிட்டுப் பாருங்கள் என்று எடப்பாடி பழனிசாமி, கடந்த ஆட்சியிலும், தற்போதும் உள்ள விலைகளை பட்டியலிட்டு கூறினார்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 27 Feb 2026 11:48 AM IST
அதிமுக ஆட்சியுடன் ஒப்பிட்டு திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை பட்டியலிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளளார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரசார பயணத்தை பல்லாவரம், தாம்பரம் ஆகிய தொகுதிகளில் நேற்றைய தினம் மேற்கொண்டார். இதையொட்டி குரோம்பேட்டை 200 அடி ரேடியல் சாலையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடி சென்னைக்கு வந்தபோது கருப்பு பலூன் விட்டார். ஆட்சிக்கு வந்ததும் பிரதமர் மோடிக்கு ரத்தினக் கம்பளம் விரித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்க வைத்தார். பிரதமர் மோடி சென்னை வந்தபோது வெள்ளை குடை பிடித்தார். இதுதான் ஸ்டாலினின் இரட்டை வேடம்.

1 / 5
திமுக 525 வாக்குறுதி கொடுத்தது. 4ல் ஒரு பங்கு கூட நிறைவேற்றவில்லை ஆனால் 98 சதவீதம் நிறைவேற்றியதாகச் சொல்கிறார். விலைவாசி உயர்வை எண்ணிப் பாருங்கள். அதிமுக ஆட்சியை ஒப்பிட்டுப் பாருங்கள். பச்சரிசி சாப்பாட்டு அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் ரூ.40, திமுக ஆட்சியில் ரூ.75, பொன்னி புழுங்கல் அரிசி அதிமுக ஆட்சியில் ரூ.45  திமுக ஆட்சியில் ரூ.75, இட்லி புழுங்கல் அரிசி ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் ரூ.30, திமுக ஆட்சியில் ரூ.48, கடலை எண்ணெய் ஒரு லிட்டர் அதிமுக ஆட்சியில் ரூ.130ஆக உயர்ந்துவிட்டது.

2 / 5
திமுக ஆட்சியில் ரூ.190, நல்லெண்ணெய் ஒரு லிட்டர் அதிமுக ஆட்சியில் ரூ.250, திமுக ஆட்சியில் ரூ.400, துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் ரூ.74, திமுக ஆட்சியில் ரூ.130, உளுந்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் ரூ.79, திமுக ஆட்சியில் ரூ.120ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது.
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் பாதிப்பு பற்றி சிந்திக்க நேரமில்லை.

திமுக ஆட்சியில் ரூ.190, நல்லெண்ணெய் ஒரு லிட்டர் அதிமுக ஆட்சியில் ரூ.250, திமுக ஆட்சியில் ரூ.400, துவரம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் ரூ.74, திமுக ஆட்சியில் ரூ.130, உளுந்தம் பருப்பு ஒரு கிலோ அதிமுக ஆட்சியில் ரூ.79, திமுக ஆட்சியில் ரூ.120ஆக எல்லா விலையும் உயர்ந்துவிட்டது. விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயலவில்லை. ஏழை நடுத்தர மக்கள் பாதிப்பு பற்றி சிந்திக்க நேரமில்லை.

3 / 5
கட்டுமானப்பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. ஒரு யூனிட் எம்.சாண்ட் அதிமுக ஆட்சியில் ரூ.3,000க்கு விற்றது. திமுக ஆட்சியில் ரூ.6,000க்கு விற்கிறது, ஒரு யூனிட் ஜல்லி அதிமுக ஆட்சியில் ரூ.2,000க்கு விற்றது, திமுக ஆட்சியில் ரூ.5,500க்கு விற்கிறது, ஒரு லாரி கம்பி அதிமுக ஆட்சியில் ரூ.40,000, திமுக ஆட்சியில் ரூ.65,000, ஒரு செங்கல் அதிமுக ஆட்சியில் ரூ.8க்கு விற்றது, திமுக ஆட்சியில் ரூ.13க்கு விற்கிறது, சிமெண்ட் அதிமுக ஆட்சியில் வெளிமார்க்கெட்டில் ரூ.240, திமுக ஆட்சியில் வெளி மார்க்கெட்டில் ஒரு மூட்டை ரூ.340, மரம் 200 சதவீதம் உயர்ந்துவிட்டது.

4 / 5
இனி ஏழை மக்கள் வீடு கட்டவே முடியாத அளவுக்கு உயர்ந்துவிட்டது. ஜல்லி மணலில் வேண்டுமானால் வீடு கட்டலாம். சிமெண்ட் பேஸ்பி, கம்பி எல்லாவற்றிலும் கமிஷன் இதனால் மக்களுக்குத்தான் பாதிப்பு. மின்கட்டணம் அதிமுக ஆட்சியில் எவ்வளவு திமுக ஆட்சியில் எவ்வளவு, 57% உயர்வு, வீட்டு வரி 100%, கடை வரி 150% உயர்வு, ஆண்டுக்கு 6% உயரும். வரி மேல் வரி போடும் அரசு தொடர வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

5 / 5
Follow Us