AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திண்டுக்கல்லில் இப்படியொரு சுற்றுலா தலமா.. ஒன்டே ட்ரிப்புக்கு சூப்பர் ஸ்பாட்.. பிரம்மிக்க வைக்கும் பகுதிகள்!

Palani Hill Tourist Spot: திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை கால சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக பழனி மலை உள்ளது. இந்த மலையில், பல்வேறு அணைகள், நீர் வீழ்ச்சிகள் அமைந்துள்ளன. குறைந்த நேரத்தில், குறைந்த பட்ஜெட்டில் ஒன்டே சுற்றுலா செல்ல ஏற்ற இடம்.

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 18 Feb 2026 13:40 PM IST
தமிழகத்தில்  கோடைகாலம்  நெருங்கி வருகிறது. இந்த காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும்.  இதனால்,  விடுமுறையில் வீட்டில் இருக்கும் பொதுமக்கள்  குளிர்ச்சியான சீதோசன நிலை  நிலவி வரும்  சுற்றுலா தலங்களான  கொடைக்கானல்,  ஊட்டி,  மூணார்  உள்ளிட்ட  பகுதிகளுக்கும்  நீர்  நிலைகள் சார்ந்திருக்கும் பகுதிகளுக்கும் படையெடுத்து வருவார்கள். இந்த நிலையில்,  தமிழகத்தில்  நமக்கு பெரிதளவில் தெரியாமல்  மறைந்திருக்கும் சிறந்த சுற்றுலா தலங்கள் ஏராளமான  உள்ளன.

1 / 5
அந்த வகையில்,  திண்டுக்கல் மாவட்டத்தில்  பழனி மலை  மிகச்சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இந்த மலையானது மேற்கு தொடர்ச்சி  மலையில் கிழக்கு பகுதியில்  அமைந்துள்ளது.  இந்த மலையானது  அந்த மாவட்ட மக்களுக்கு  முக்கிய சுற்றுலா தலமாக  விளங்கி வருகிறது. இந்த பழனி மலைத் தொடரில் மிக முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல்  அமைந்துள்ளது. இந்த மலையில்  வரதமா நதி  அணை,  பாலாறு அணை,  மேல் பள்ளம் பைன் பாரஸ்ட்  உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.

2 / 5
இங்கு சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகள் போர் அடிக்காமல் அனைத்து பகுதிகளை ஒரு வித உற்சாகத்துடன் சுற்றிப்பார்த்து கண்டு களிக்கலாம். இதே போல, ஒட்டன்சத்திரத்தில் இருந்து  கொடைக்கானலுக்கு செல்லும் வழியில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில்  பரப்பலாறு அணை அமைந்துள்ளது.  இந்த அணையில் தேங்கி இருக்கும்  தண்ணீரானது நமது மனதை கொள்ளையடிக்கும் வகையில் காணப்படும்.  இதனை கண் குளிர சுற்றி பார்த்துவிட்டு  அருகிலேயே உள்ள  தலையூத்து அருவியையும்  சுற்றிப் பார்க்கலாம்.

3 / 5
மேலும்,  இந்த அருவியில் வானில் இருந்து கொட்டும் நீரில் நனைந்து குதூகலமாக  குளித்து கும்மாளம் இடலாம். திண்டுக்கல்  சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த  சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஒரு நாள்  சுற்றுலா செல்ல வேண்டும் என்றால்  பழனி மலைக்கு  செல்லலாம்.  குறைந்த செலவில்  குறைந்த மணி நேரத்தில்  சுற்றுலா செல்வதற்கு  ஏற்ற இடமாக  பழனி மலை  விளங்கி வருகிறது. இந்த மலைப்பகுதி வழியாக சுமார் 65 கிலோ மீட்டர்  பயணம் மேற்கொண்டால்  கொடைக்கானல் சுற்றுலா தலத்துக்கு  சென்றடையலாம்.

4 / 5
பொதுவாக கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள்  திண்டுக்கல்-  வத்தலகுண்டு வழியாக  பயணம் மேற்கொள்வார்கள்.  ஆனால்,  பழனி மலை வழியாக  பயணம் மேற்கொண்டால் மேற்கண்ட சுற்றுலா தலங்களை  கண்டு களித்தவாறு  கொடைக்கானலை சென்றடையலாம்.   திண்டுக்கல்லில் இருந்து  சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள  பழனி மலைக்கு  1:20 நேரத்தில் செல்ல முடியும். கோடை காலத்துக்கு ஏற்ற இடமாகவும், என்ஜாய்மெண்டுக்கு பஞ்சமில்லாத இடமாகவும் பழனி மலை விளங்கும் என்பதில் ஐயமில்லை.

5 / 5