AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னையில் வருகிறது ஸ்மார்ட் பாதுகாப்பு பெட்டகம்… 10 இடங்களில் அமைக்க திட்டம்… மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு!

Chennai Smart Security Device: சென்னை மாநகராட்சியில் சுமார் 10 இடங்களில் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ஸ்மார்ட் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட உள்ளது. இதில், பொது மக்கள் தங்களது பொருள்களை கட்டண முறையில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம்.

சென்னையில் வருகிறது ஸ்மார்ட் பாதுகாப்பு பெட்டகம்… 10 இடங்களில் அமைக்க திட்டம்… மாநகராட்சியின் சூப்பர் அறிவிப்பு!
சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட்ட பாதுகாப்பு பெட்டகம் அமைப்பு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 28 Feb 2026 07:17 AM IST

சென்னை மாநகராட்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு உள்கட்டமைப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில், மின்சாரத்தில் இயங்கும் கட்டண இ- ஸ்கூட்டர், சைக்கிள் உள்ளிட்டவை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் கட்டண அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான கட்டணத்தை ஆன்லைன் வழியாக செலுத்தவும் வழிவகை உள்ளது. இந்த நிலையில், சென்னைக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் தங்களது உடைமைகளை வைத்துக்கொண்டு சென்னையின் அழகை சுற்றி பார்க்க முடியாது. இதற்காக, அவர்களது உடைமைகளை தங்கி இருக்கும் அறைகள் உள்ளிட்டவற்றில் வைக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால், உடைமைகள் ஒரு பக்கமும் அதன் உரிமையாளர்கள் ஒரு பக்கமும் இருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக, சுற்றுலா பயணிகள் தங்களது உடைமைகளை வைப்பதற்கு சென்னை மாநகராட்சி புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.

10 இடங்களில் அமைகிறது ஸ்மார்ட் பாதுகாப்பு பெட்டகம்

அதன்படி, சென்னையில் முதல் கட்டமாக விக்டோரியா பொது அரங்கம், மெரினா பீச், முக்கிய பார்க்குகள் என பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் சுமார் 10 இடங்களில் சிறிய அளவிலான ஸ்மார்ட் பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்படுகிறது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், விக்டோரியா பொது அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் பாதுகாப்பு பெட்டகமானது 8 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 4 அடி அகலத்தில் உள்ள அதன் மேற்பகுதியில் பொருள்கள் திருடு போவதை தடுக்கும் வகையில் இருபுறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: மக்களின் நம்பிக்கைகளை வாக்குகளாக மாற்ற வேண்டும்… திமுக மாநாட்டில் மு.க. ஸ்டாலின் பேச்சு!

பாதுகாப்பு பெட்டகத்தில் 16 அறைகள்

இந்த பாதுகாப்பு பெட்டகத்தில் பீரோவில் இருப்பது போல 16 அறைகள் உள்ளன. இதில், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது பொருள்கள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். இதற்கு டிஜிட்டல் முறையில் பூட்டும் வசதியும் உள்ளது. இதனால், பொருள்கள் வைக்கும் நபரை தவிர வேறு யாரும் இந்த அறையை திறக்க முடியாது. இந்த பாதுகாப்பு பெட்டகத்தை உபயோகம் செய்வதற்கான கட்டணத்தை அந்த பெட்டகத்தில் உள்ள கியூ ஆர் குறியீட்டை செல்போனில் ஸ்கேன் செய்து செலுத்திக் கொள்ளலாம்.

நகரின் மற்ற பகுதியிலும் ஸ்மார்ட் பாதுகாப்பு பெட்டகம்

இதே போல, தங்களது செல்போன் மூலமாக பாதுகாப்பு பெட்டகத்தின் அறையே திறக்கவும், மூடவும் முடியும். இந்த பாதுகாப்பு பெட்டகத்தில் தங்களது பொருட்களை வைப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகிறது. முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நகரின் முக்கிய பகுதிகளில் இந்த பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு… 12 பேர் ஜாமீன் திடீர் ரத்து… நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு!

Follow Us