AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலிர்ப்பூட்டும் சுற்றுலா தலம்.. பசுமை போர்த்திய பகுதிகள்.. தர்மபுரியில் இருந்து 2 மணி நேரம் தான்!

Sitheri Hill Tourist Spot: தர்மபுரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது சித்தேரி மலை. இந்த மலைக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் பசுமை போர்த்திய ஏராளமான பகுதிகள், அணைகள், நீர் வீழ்ச்சிகள், வியூ பாயிண்டுகள் ஆகியவற்றை பார்க்கலாம்.

சிலிர்ப்பூட்டும் சுற்றுலா தலம்.. பசுமை போர்த்திய பகுதிகள்.. தர்மபுரியில் இருந்து 2 மணி நேரம் தான்!
சிலிர்ப்பூட்டு சிறந்து சுற்றுலா தலம் சித்தேரிமலை
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 25 Feb 2026 20:54 PM IST

தர்மபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சித்தேரி மலை. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3,600 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் பசுமை சார்ந்த காடுகள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் சூழலுடன் இந்த பகுதி சுற்றுலாப் பயணிகளை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளை கொள்ளை கொள்ளும் வகையில் அடர்த்தியான காடுகள், பல்வேறு தாவர வகைகள், இதமான காலநிலை ஆகியவை நிறைந்துள்ளது. இதனால், இந்த பகுதிக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகளை சிலிர்க்க வைக்கும் வகையில் இந்த சூழல் அமைந்திருக்கும். மேலும், சுற்றுலா பயணிகள் ட்ரக்கிங் செல்வதற்கும் இங்கு அனுமதி உள்ளது. இந்த மலைப்பகுதியில் சுமார் 20 அடி உயரத்தில் ஒரு அழகிய சித்தேரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

மாம்பாறை- சித்தேரி வியூ பாய்ண்டுகள்

இந்த நீர் வீழ்ச்சியானது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இதே பகுதியில் மாம்பாறை மற்றும் சித்தேரி வியூ பாய்ண்டுகள் அமைந்துள்ளன. இங்கிருந்து நாம் மலையின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களின் அழகையும், சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை கண்கூறாக கண்டு ரசிக்கலாம். இதே போல, ஆன்மீக சுற்றுலா தலத்துக்கு ஈடாக இந்த பகுதியில் வெங்கட் ராமசாமி என்ற ஒரு முக்கியமான கோவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் அரிய வகை புற்கள் மற்றும் அரிய வகை மல்லிகை பூக்கள் காணப்படுகின்றன.

மேலும் படிக்க: மூங்கில் காடுகள் நிறைந்த யானைகள் நடமாடும் பகுதி.. தங்கியிருந்து சுற்றி பார்க்க ஏற்ற இடம்.. கிருஷ்ணகிரியில் இருந்து 2 மணி நேர பயணம் தான்!

ட்ரெக்கிங் பயணத்தின்போது குறுக்கிடும் வன விலங்குகள்

திரில்லிங்கான ட்ரெக்கிங் பயணத்தின் போது காட்டுப்பன்றிகள், மான்கள், குரங்குகள் மற்றும் பல்வேறு வகையான பறவைகள் ஆகியவற்றை கண்டு ரசித்துக் கொண்டு மலை ஏறி செல்லலாம். இது நமக்கு ஒரு உற்சாகமான அனுபவத்தை தரும். இதில் குறிப்பாக சித்தரி மலைப் பகுதியில் வள்ளி மதுரை என்ற பிரம்மாண்ட அணை அமைந்துள்ளது. இங்கு தேங்கி இருக்கும் நீரானது கடல் போல காட்சியளிக்கும். இதைத் தாண்டி சென்றால் பொம்மிடி அருகே உள்ள சேர்வராயன் மலை அடிவாரத்தில் ஆணை மடுவு அணை மற்றும் ஆணை மடுவு நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.

2.5 மணி நேரத்தில் ஒன்டே ட்ரிப்

இவை இரண்டும் இந்த பகுதியில் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. இந்த பகுதியானது பசுமை போர்த்தியது போல காணப்படுவதால் நம் கண்களுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு வித ஊட்டச்சத்து உடலில் ஏறும். இதனால், ஒன்டே ட்ரிப் செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்துக்கு சென்று வரலாம். தர்மபுரியில் இருந்து சுமார் 85 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு 2.5 மணி நேர பயணத்தில் செல்ல முடியும்.

மேலும் படிக்க: குளிர்ச்சியான மலை பிரதேசம்.. கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்.. 3500 அடி உயரத்தில் ரம்மியமாக காட்சியளிக்கும் சுற்றுலா தலம்!

Follow Us