AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வியூ பாயிண்டுகள்… நீர் வீழ்ச்சிகள்… பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்ற மினி கொடைக்கானல்!

Sirumalai Tourist Spot: பல்வேறு வியூ பாயிண்டுகளும், ஏராளமான நீர் வீழ்ச்சிகளும், படகு சவாரி செய்தவதற்காக அமைந்துள்ள ஏரியும் என பல்வேறு சுற்றுலா இடங்களுடன் விளங்கி வருகிறது சிறுமலை சுற்றுலா தலம். இந்தப் பகுதிக்கு கோடை கால சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாகும்.

Gowtham Kannan
Gowtham Kannan | Published: 26 Feb 2026 20:25 PM IST
தமிழகத்தில்  ஊட்டி மற்றும் கொடைக்கானல்  ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு இணையாகவும்,  சுற்றுலா பயணிகளுக்கு பெரிதளவில்  தெரியாமலும் பல்வேறு சுற்றுலா தலங்கள் மறைந்துள்ளன.  அந்த வகையில்,  திண்டுக்கல் மாவட்டத்தில்  அமைந்துள்ள சிறுமலை முக்கிய பங்கு வகிக்கிறது.  இந்த சிறுமலையானது  மிதமான தட்பவெப்ப நிலை மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு சிறந்த  மலை பிரதேசமாக விளங்கி வருகிறது.  இங்கு,  கொடைக்கானல் மற்றும்  ஊட்டி போல அதிக அளவு  குளிரும் இல்லாமல்,  சமவெளி பகுதிகளை போல அதிக வெப்பமும் இல்லாமல்  ஆண்டு முழுவதும் சமநிலையான  சூழல் நிலவி வருகிறது.

1 / 5
இந்த பகுதியில் ஏராளமான மூலிகைகள்  நிறைந்து காணப்படுகிறது.  மேலும்,  காட்டு மாடுகள்,  குரங்குகள்,  கடமான்கள்  உள்ளிட்ட வனவிலங்குகள்  சுற்றி திரிந்து வருகின்றன. இந்த சிறுமலையானது  திண்டுக்கல் அருகே தொடங்கி  வாடிப்பட்டி வரை  பறந்து விரிந்துள்ளது.  இந்த பகுதியில் பழங்குடியின மக்கள் தங்களது  பழங்காலத்தை மறக்காமல்  இதே பகுதியில் வசித்து வருகின்றனர்.  இந்த பகுதியில்  மிளகு,  காபி, சவ்சவ்  உள்ளிட்ட விவசாய பொருள்களும்  விளைவிக்கப்பட்டு வருகிறது.  இந்த பகுதியானது  மினி கொடைக்கானல் என்றும்  அழைக்கப்பட்டு வருகிறது.

2 / 5
இந்த பகுதியில் செயற்கை ஏரி,  வேலப்பர் கோவில்  மற்றும் 500  ஆண்டுகள் பழமையான  சிவன் கோவில்,  பல்வேறு அருவிகள்,  கண்கவர் வியூ பாயிண்டுகள்  ஆகியவை அமைந்துள்ளன.  ட்ரக்கிங் செல்வதற்கும்  இங்கு வழிவகை உள்ளது. மேலும்,  அந்தப் பகுதியில் அமைந்துள்ள  சிறுமலை ஏரியில்  படகு சவாரி  செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இங்கு வரும் சுற்றுலா பயணிகள்  படகு சவாரியில் பயணம் செய்து கொண்டு  ஏரியின் அழகையும்,  அதனை சுற்றி அமைந்திருக்கும் மலைகளின் அழகையும்,  ஏரியில்  தேங்கியிருக்கும்  தண்ணீரையும் உள்ளம் குளிர  சுற்றிப் பார்க்கலாம்.

3 / 5
அங்கு உள்ள அப்சர்வேஷன் டவரில்  ஏறி நின்றால்,  சிறுமலையின் மொத்த அழகையும்  காண்பதற்கு  நமது இரு கண்கள் போதாது  என்றே கூறலாம்.  இவ்வாறு பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு  உச்சி முதல் பாதம் வரை குளிரும் வகையில்  குட்லாடம்பட்டி  அருவி,  வேலமலை அருவி,  சிறுமலை அருவி  ஆகியவற்றின்  உற்சாகமாக குளித்து  குத்தாட்டம் போடலாம்.  மேலும்,  செல்வி கோயில் கிளீவ்லேண்ட் வியூ பாயிண்டில் இருந்து கொண்டு,  சுற்றுப்பகுதியில்  மொத்த அழகையும்  மனம் கொள்ளை போகும் வரை  கண்டு ரசிக்கலாம்.

4 / 5
இவ்வளவு முக்கியத்துவம் நிறைந்துள்ள இந்த சிறுமலையானது திண்டுக்கல்லில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில்  அமைந்துள்ளது.  இந்த சிறுமலைக்கு  ஒரு மணி நேரத்தில்  சென்றடையலாம். இந்த பகுதியில் மிகவும் பிரபலம் வாய்ந்த சிறுமலை  வாழைப்பழத்தை  கண்டிப்பாக சுற்றுலா பயணிகள் ருசித்து பார்க்க வேண்டும். ஏனென்றால் இங்கு விளையும் இந்த பழம் அவ்வளவு சுவையாக இருக்கும். இதற்காகவே  கோடை காலத்தில் இங்கு  சுற்றுலா செல்ல ஏற்ற இடம் ஆகும்.

5 / 5
Follow Us