AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நீங்கள் இளம் வயதில் செய்யும் இந்த தவறுகள் உங்கள் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்!

Do Not These Financial Mistakes At Your Young Age | பொருளாதாரம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் மிக முக்கிய ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், இளம் வயதில் செய்யும் சில நிதி தவறுகள் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும் அம்சங்களாக மாறிவிடும்.

நீங்கள் இளம் வயதில் செய்யும் இந்த  தவறுகள் உங்கள் பொருளாதார பாதுகாப்பை சீர்குலைக்கும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Apr 2026 16:42 PM IST

பொருளாதார பாதுகாப்பு (Financial Security) என்பது மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் மிக முக்கிய ஒன்றாக உள்ளது. பொருளாதார பாதுகாப்பு இல்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் நடைபெறும் பொருளாதார சிக்கல் மற்றும் நிதி நெருக்கடிகளில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே தான் பொருளாதாரத்தை மேபடுத்தி, பாதுகாப்பானதாக மாற்றுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த நிலையில், நீங்கள் இளம் வயதில் செய்யும் ஒருசில பொருளாதார தவறுகள் உங்களது பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இளம் வயதில் செய்யக்கூடாத பொருளாதார தவறுகள்

இளம் வயதில் செய்யும் சில தவறுகள் பொருளாதார பாதுகாப்பை மிக கடுமையாக பாதிக்கும் காரணிகளாக மாறும் வாய்ப்பு உள்ளது.

ஆடம்பர செலவுகள்

இளைஞர்கள் மத்தியில் ஆடரம்பர செலவுகள் அதிகரித்து காணப்படுகிறது. விலை உயர்ந்த ஸ்மார்ட்போன், லேப்டாப், உடைகள் என ஆடம்பரமாக செலவு செய்வதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால், இளம் வயதிலேயே முதலீடு செய்வதன் மூலம் பொருளாதார பாதுகாப்பை மிக சுலபமாக அடைய முடியும் என்பதை அவர்கள் மறந்திவிடுகின்றனர்.

இதையும் படிங்க : சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை.. அரசு அறிவிப்பு!

முதலீட்டை தள்ளிப்போடுவது

பெரும்பாலான இளைஞர்கள் இளமையில் தான் உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்ற எண்ணத்தில் சம்பாதிக்கும் பணம் முழுவதையும் செலவு செய்துவிடுகின்றனர். இதன் காரணமாக பலரும் இளமை காலத்தில் முதலீடு செய்வது குறித்து கருத்தில் கொள்வதில்லை. இது அவரிகளின் எதிர்காலத்தை மிக கடுமையாக பாதிக்கும்.

தேவையற்ற கடன்களை வாங்குவது

பெரும்பாலான இளைஞர்கள் தேவையற்ற கடன்களை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தற்போதைய காலக்கட்டத்தில் ஏராளமான மொபைல் செயலிகள் கடன் வழங்குவதால், எளிதாக கடன் கிடைக்கிறது என்பதால் பலரும் அதிக கடன்களை வாங்குகின்றனர். அவ்வாறு செய்வது பொருளாதாரத்தை மிக கடுமையாக பாதிக்கும்.

இதையும் படிங்க : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய மதிப்பு வரலாறு காணாத சரிவு – என்ன காரணம்?

அவசரகால நிதியை உருவாக்காமல் இருப்பது

ஒவ்வொரு மனிதருக்கும் அவசரகால நிதி என்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. காரணம், திடீரென பணியை இழக்கும் சூழல், உடல்நல குறைபாடு அல்லது பொருளாதார சிக்கல் என எது வேண்டுமானாலும் ஏற்படலாம். அத்தகைய சூழல்களை சமாளிக்க கூடுதல் பணம் தேவைப்படும். இந்த நிலையில், அவசரகால நிதியை உருவாக்காமல் இருப்பது தேவையற்ற கடன்களில் சிக்கிக்கொள்ள வழிவகை செய்யும்.

Follow Us