AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ETF Vs மியூச்சுவல் ஃபண்ட்.. இரண்டில் இரண்டு மடங்கு லாபம் தருவது எது?

ETF Vs Mutual Fund Investment Schemes | ஈடிஎஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் ஆகியவை இந்தியாவின் மிக பிரபலமான முதலீட்டு திட்டங்களாக உள்ளன. இந்த நிலையில், இந்த இரண்டு திட்டங்களில் எதில் முதலீடு செய்வதன் மூலம் இரண்டு மடங்கு லாபம் பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ETF Vs மியூச்சுவல் ஃபண்ட்.. இரண்டில் இரண்டு மடங்கு லாபம் தருவது எது?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 29 Mar 2026 11:46 AM IST

இந்தியாவில் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் மிக முக்கியமாக உள்ள திட்டங்கள் தான் ஈடிஎஃப் (ETF – Exchange Traded Funds) மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) திட்டங்கள். அதிக இந்திய மக்கள் முதலீடு செய்யும் திட்டங்களாக இவை இரண்டும் உள்ளன. இந்த நிலையில், ஈடிஎஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட், இந்த இரண்டு திட்டங்களில் அதிக லாபத்தை தரக்கூடிய திட்டம் எது, எதில் முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபத்தை பெற முடியும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈடிஎஃப் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுக்கு இடையே உள்ள வித்தியாசங்கள்

ஒருவர் தனது பணத்தை ஸ்மார்ட் ஆக முதலீடு செய்ய நினைத்து குறைந்த தொகையை முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க நினைக்கிறார் என்றால் அவருக்கு ஈடிஎஃப் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவே சந்தை நிலவரம் குறித்து பெரிய தெளிவு இல்லை, முதலீடு செய்யும் பணத்தை ஒரு நிபுணர் நிர்வகிக்க வேண்டும் என நினைப்பவர்கள் மியூச்சுவல் ஃபண்டை முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

இதையும் படிங்க : ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறலாம்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

ஈடிஎஃப் முதலீடு என்றால் என்ன? – எப்படி செயல்படுகிறது?

ஈடிஎஃப் முதலீடு என்பது ஒரு நிறுவனத்தின் பங்குகளை போன்றது. இதனை பங்குச்சந்தை இயங்கும் நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் டீமேட் கணக்கு மூலம் வாங்கவோ, விற்பனை செய்யவோ முடியும். இந்த ஈடிஎஃப்களின் விலை தங்கம் மற்றும் பங்குச்சந்தைகளை போலவே மாற்றம் அடைந்துக்கொண்டே இருக்கும். சந்தையின் நிலவரம் என்னவாக உள்ளதோ அதனை மையப்படுத்தியே ஈடிஎஃப் முதலீட்டுக்கான லாபமும் இருக்கும்.

இதையும் படிங்க : வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்க பே ஸ்லிப் இல்லையா?.. கவலை வேண்டாம்.. இந்த அம்சங்கள் போதும்!

மியூச்சுவல்முதலீடு என்றால் என்ன? – எப்படி செயல்படுகிறது?

மியூச்சுவல் ஃபண்டுகள் நேரடியாக பங்குச்சந்தையில் செயல்படும் முதலீடு அல்ல. இவை நேரடியாக வர்த்தகம் செய்யப்படுவது இல்லை. இந்த மியூச்சுவல் ஃபண்ட் பங்குகளை நீங்கள் ஒரு ஃபண்ட் ஹவுஸ் அல்லது ஏஜெண்ட் மூலம் பெற்றுக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் 3 மணிக்கு முன்பு பணம் செலுத்தினால் அன்றைய நாளின் இறுதி விலையில் யூனிட்கள் கிடைக்கும். ஒருவேளை 3 மணிக்கு மேல் பணம் செலுத்துகிறீர்கள் என்றால் அடுத்த நாளின் கணக்கில் தான் எடுத்துக்கொள்ளப்படும்.

எனவே முதலீடு செய்வதற்கு முன்னதாக இந்த இரண்டு முதலீடுகளின் வித்தியாசங்கள், இவற்றில் எது உங்களது பொருளாதார சூழலுக்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை உணர்ந்து முதலீடு செய்யுங்கள்.

Follow Us