AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.5 லட்சம் வரை ஈஸியா பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. EPFO 3.0-ன் முக்கிய அம்சம்!

EPFO 3.0 Special Feature To Claim Money | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ரூ.1 லட்சம் வரை மனித தலையிடல்கள் இல்லாமல் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய இபிஎஃப்ஓ 3.0 மூலம் தற்போது ரூ.5 லட்சம் வரை எடுக்க முடியும்.

ரூ.5 லட்சம் வரை ஈஸியா பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. EPFO 3.0-ன் முக்கிய அம்சம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 21 Mar 2026 12:45 PM IST

ஊழியர் வருங்காலை வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) மூலம் ஏராளமான ஊழியர்கள் பல்வேறு சிறப்பு பலன்களை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தான், இபிஎஃப்ஓ 3.0 என்ற அம்சத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம்  அறிமுகம் செய்துள்ளது. இதில் ஏராளமான சிறப்பு அம்சங்கள் பயனர்களுக்கு கிடைக்கிறது. இபிஎஃப்ஓவின் இந்த புதிய பரிணாமத்தின் மூலம் அனைத்து சேவைகளையும் பயனர்கள் மிக விரைவாக பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிலையில், இபிஎஃப்ஓ 3.0-ல் ரூ.5 லட்சம் வரை எந்த வித மனித தலையிடல்களும் இல்லாமல் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சேவைகளை எளிதாக பெற அறிமுகம் செய்யப்பட்ட இபிஎஃப்ஓ 3.0

ஊழியர்கள இபிஎஃப்ஓவின் அனைத்து சேவைகளையும் மிக எளிதாக பெறும் வகையில், இபிஎஃப்ஓ 3.0 என்ற அம்சத்தை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. ஊழியர்கள் சேவைகளை மிக எளிதாகவும், விரைவாகவும் பெறுவதை நோக்கமாக கொண்டு இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.5 லட்சம் வரையிலான பணத்தை எந்த விதமான மனித தலையிடல்களும் இன்றி எடுத்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : ஆதாரில் இந்த விவரங்களை ஒருமுறை மட்டுமே அப்டேட் செய்ய முடியும்.. என்ன என்ன தெரியுமா?

ரூ.5 லட்சம் வரை ஆட்டோ செட்டில்மெண்டில் எடுத்துக்கொள்ளலாம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அதில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும் பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால், இதற்கான அளவு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது, முன்பு ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ரூ.1 லட்சம் வரை மட்டுமே எந்த வித மனித தலையிடல்களும் இல்லாமல் பணம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இதையும் படிங்க : பான் கார்டுக்கு விண்ணப்பிக்க இனி ஆதார் மட்டும் போதாது.. மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!

ஆனால், தற்போது இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தின் மூலம் ரூ.5 லட்சம் வரை மனித தலையிடல்கள் இல்லாமல் ஆட்டோ செட்டில்மெண்ட் (Auto Settlement) முறையில் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த அசத்தலான அம்சத்தின் மூலம் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு எந்த வித சிக்கல்களும் இல்லாமல் மிக விரைவாகவும், எளிதாகவும் ரூ.5 லட்சம் வரையிலான பணத்தை எடுத்துக்கொள்ள முடியும்.

Follow Us