ATM : ஏடிஎம்-ல் இத்தனை சேவைகளா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க!
ATM Services | பெரும்பாலான பொதுமக்கள் ஏடிஎம் இயந்திரங்களை பணம் எடுப்பதற்கும், பணம் செலுத்துவதற்கும் மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால்ம் ஏடிஎம் மையங்கள் மூலம் 10-க்கும் மேற்பட்ட சேவைகளை பெற முடியும். அது என்ன என்ன சேவைகள் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வங்கிக்கு சென்று படிவத்தை நிரப்பி, வரிசையில் காத்திருந்து பணத்தை எடுக்க வேண்டிய சூழலை மாற்றி, 24 மணி நேரமும் எந்தவித சிக்கல்களும் இன்றி பணத்தை எடுத்துக்கொள்ள ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்த ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஏராளமான பொதுமக்கள் தங்களின் அன்றாட பண தேவைகளுக்கு ஏடிஎம் மையங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், ஏடிஎம் மையங்கள் வெறும் பணம் செலுத்துவதற்கு மற்றும் பணம் எடுப்பதற்கு மட்டுமல்ல. அதில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஏடிஎம் – 10-க்கும் மேற்பட்ட சேவைகளை பெறலாம்?
ஏடிஎம் மையங்கள் மூலம் பணம் எடுப்பது, பணம் செலுத்துவது மட்டுமன்றி 10-க்கும் மேற்பட்ட சேவைகளை பெற முடியும்.




- பணம் எடுப்பது
- பணம் டெபாசிட் செய்வது
- இன்சூரன்ஸ் ப்ரீமியம் செலுத்துவது
- மொபைல் ரீச்சார்ஜ் செய்வது
- பேலன்ஸ் செக் செய்வது
- மினி ஸ்டேட்மென்ட் பெறுவது
- ஏடிஎம் பின் எண்ணை மாற்றுவது
- செக் புக் பெறுவது
- ஏடிஎம் கார்டை ஆக்டிவேட் செய்வது
- கணக்குகளில் இருந்து பணத்தை மாற்றுவது
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த 10 சேவைகளை ஏடிஎம் மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : இன்று தான் கடைசி தேதி.. இகேஒய்சி செய்யவில்லை என்றால் நாளை முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காது!
சேவைகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளனவா?
இந்த சேவைகள் தற்போதும் கூட ஏடிஎம் மையங்கள் மூலம் கிடைக்கின்றனவா என்று பொதுமக்கள் மத்தியில் குழப்பம் உள்ளது. ஏடிஎம் மையங்கள் மூலம் வழங்கப்படும் இந்த சேவைகள் குறித்து அந்த அந்த வங்கிகள் தான் பொதுமக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். இவ்வாறு, போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக இந்த சேவைகள் பயன்படுத்தப்படுவதே இல்லை.
இதையும் படிங்க : பிஎம் ஸ்வநிதி திட்டம் – சிறு வியாபாரிகளுக்கு ரூ.90,000 கடன் – எப்படி பெறுவது?
என்னதான் பொதுமக்கள் ஏடிஎம்-ல் கிடைக்கும் இந்த பிற சேவைகளை பயன்படுத்தவில்லை என்றாலும், பொதுமக்கள் மத்தியில் ஏடிஎம் செயலிகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதாவது, இந்தியாவில் இதுவரை சுமார் 2,65,000 ஏடிஎம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.