கோவையில் இறந்த மாணவரின் சகோதரருக்கு அரசு வேலை…நிவாரணமாக 6 லட்சம் – அமைச்சர் அறிவிப்பு
Coimbatore Student Family Relief : கோவையில் சக மாணவர்களால் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இறந்த மாணவரின் சகோதரருக்கு அரசு வேலைக்கான உத்திரவாதம் வழங்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.
கோவை, ஆகஸ்ட் 16 : கோவையில் இறந்த மாணவரின் சகோதரருக்கு அரசு வேலைக்கான உத்திரவாதமும் வழங்கப்பட்டிருக்கிறது என அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் என்ற மாணவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ஆம்ஆண்டு பயின்று வந்தார். இதனையடுத்து அவரை சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் நிலையில் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அமுதன் உயிரிழந்தார். இது குறித்து அமுதனின் நண்பர் அளித்த புகாரின் பேரில் செட்டிபாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்ச்சையை ஏற்படுத்திய கல்லூரி மாணவரின் மரணம்
முன் விரோதம் காரணமாக மாணவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் தொடர்புடைய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது..இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க : “தமிழ்நாட்டில் பால் உற்பத்தி திடீர் சரிவு!”.. தட்டுப்பாடு உருவாகும் அபாயம்?.. முழு விவரம்!!




இந்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், கோவை கல்லூரி மாணவர் அமுதனின் கொலையை கோஷ்டி பூசல் என தவெக அமைச்சர் சொல்கிறார். 10 பேருக்கும் 10 பேருக்கும் தகராறு நடந்தால் அதுக்கு பெயர் கோஷ்டி பூசல். ஆனால், 10 பேர் சேர்ந்து ஒரு பையனை அடிச்சா அதுக்கு பெயர் கொலை. அது என்ன கோஷ்டி பூசலா? கொலை செய்யப்பட்ட மாணவருக்கு திமுக நிச்சயம் நீதி வழங்கிக் கொடுக்கும் என்றார்.
மாணவர் சகோதரருக்கு அரசு வேலை
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சம்பத்குமார் , கோவையில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அமுதன் என்ற கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.6 லட்சம் வழங்குவதற்கான ஆணையும், குடும்பத்திற்கு பட்டா வழங்குவதற்கான ஆணையும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும் இறந்த மாணவர் சகோதரருக்கு அரசு வேலைக்கான உத்திரவாதமும் வழங்கப்பட்டிருக்கிறது என்றார்.
இதையும் படிக்க : “உதவி செஞ்ச பிறகுதான் உள்ள மம்மூட்டி சார் இருக்குறதே தெரிஞ்சிது!”.. மதுரை நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
முன்னதாக சட்டமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், கோயம்புத்தூர் மாவட்டம் தனியார் கல்லூரியில் மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக உருவான சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட மாணவரோடு பிற மாணவர்களுக்கு இருந்த கோஸ்டி மோதல் காரணமாக ஏற்பட்டது என்றார். கோஷ்டி மோதல் என அவர் பேசியதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.