நடுத்தர வர்க்கத்தினர் பொருளாதாரத்தை மேம்படுத்த பணக்காரர்களின் இந்த சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்!
Rules Followed By Rich People | பொருளாதரத்தை மேம்படுத்த அனைவரும் அயராது உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், நடுத்தர வர்க்கத்தினரை விடவும், பணக்காரர்கள் எவ்வாறு பொருளாதாரத்தை கையாளுகின்றனர், பொருளாதாரத்தை மேம்படுத்த அவர்கள் பின்பற்றும் முக்கிய நடைமுறைகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிதி சுதந்திரம் (Financial Freedom), பொருளாதார பாதுகாப்பு (Economy Safety) என்பது அனைத்து மனிதர்களுக்கும் அடிப்படை தேவையாக உள்ளது. எப்படியாவது நிதி பாதுகாப்பை எட்டிவிட வேண்டும் என நடுத்தர வர்க்கத்தினர் பலர் அயராது உழைத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால், அவர்களால் அந்த பொருளாதார சுதந்திரத்தை அடைய முடிவதில்லை. ஆனால், பணக்காரர்களோ தங்களது பொருளாதாரத்தை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர். அதற்கு அவர்கள் பின்பற்றும் சில முக்கிய நடைமுறைகள் தான் காரணமாக உள்ளது. இந்த நிலையில், நிதி பாதுகாப்பை மேம்படுத்த பணக்காரர்கள் பின்பற்றும் சில முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
செலவா Vs முதலீடு
நடுத்தர வர்க்கத்தினரை பொருத்தவரை தங்களுக்கு கிடைக்கும் வழக்கமான வருமானத்தை விட கூடுதல் வருமானம் கிடைத்தால் அதனை கார், பைக், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவற்றை வாங்க செலவு செய்துவிடுகின்றனர். ஆனால், பணக்காரர்கள் அப்படி செய்வதில்லை. அவர்கள் வழக்கத்தை விட கூடுதல் வருமானம் கிடைத்தால் அதனை வேறு ஏதேனும் ஒரு முதலீட்டில் முதலீடு செய்கின்றனர்.
பல வழிகளில் வருமானம்
நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் வேலையை நம்பியே இருப்பர். திடீரென வேலை போய்விட்டது என்றாலோ அல்லது உடல்நல குறைபாடு ஏதேனும் ஏற்பட்டு பணிக்கு செல்ல முடியாத சூழல் உருவானாலோ அவர்களால் அந்த மாதத்திற்கான செலவை சமாளிக்க முடியாது. ஆனால், பணக்காரர்கள் அப்படி அல்ல. அவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வருமானம் தரக்கூடிய வழிகளை உருவாக்கி வைத்திருப்பர். ஒன்று இல்லை என்றாலும், மற்றொரு அம்சத்தில் இருந்து வருமானம் பெறுவர்.




இதையும் படிங்க : மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டுகள் FD திட்டங்கள்.. 8 சதவீதம் வரை வட்டி வழங்கும் வங்கிகள்!
நிதி சிந்தனை
நடுத்தர குடும்பங்களின் நிதி மேலாண்மை பெரும்பாலும் அந்த மாதத்திற்கான செலவுகளை பூர்த்தி செய்துக்கொள்வதையே மையமாக கொண்டு இருக்கும். இது அவர்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்தாலும் நீண்ட கால தேவைகள் கேள்விக்குறியாகவே இருக்கும். ஆனால், பணக்காரர்கள் அப்படி அல்ல. அவர்கள் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு அதற்கு ஏற்ப முதலீடு செய்கின்றனர்.
இதையும் படிங்க : ஒரே ஒருமுறை முதலீடு செய்தால் போதும்.. வாழ்நாள் முழுவதும் பென்ஷன் பெறலாம்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
வளர்ச்சியை நோக்கிய பயணம்
நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் தங்களிடம் இருப்பதே போதும் என்ற மனநிலையில் இருக்கின்றனர். அது அவர்களை வளர்ச்சியடைய விடாமல் செய்கிறது. ஆனால், பணக்காரர்களோ அப்படி செயல்படுவதில்லை. அவர்கள் வளர்ச்சியை நோக்கி மேலும் மேலும் முன்னேறுகின்றனர். புதிய தொழில் செய்வது, முதலீடு என தங்களது பொருளாதாரத்தை வளர்ச்சி அடைய செய்யும் பணிகளை மேற்கொள்கின்றனர்.