ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
April 2026 Bank Holidays List | ஒவ்வொரு மாதமும் சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்படும். அந்த வகையில், 2026 ஏப்ரல் மாதத்திற்கான விடுமுறை நாட்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் மாத விடுமுறை பட்டியல் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை, பொது விடுமுறை, உள்ளூர் பண்டிகை ஆகியவற்றின் காரணமாக வங்கிகளுக்கு சில நாட்கள் விடுமுறை வழங்கப்படும். அதுதவிர, வார விடுமுறை நாட்களின்போதும் விடுமுறை வழங்கப்படும். 2026, மார்ச் மாதம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், ஏப்ரல் மாதம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை (April Bank Holidays) அளிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026 ஏப்ரல் மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
- ஏப்ரல் 01, 2026 – ஆண்டு வங்கி கணக்கு முடியும் நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 03, 2026 – புனித வெள்ளி என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 05, 2026 – ஈஸ்டர் பண்டிகை மற்றும் ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 11, 2026 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 12, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 14, 2026 – அம்பேத்கர் ஜெயந்தி மற்றும் தமிழ் புத்தாண்டு என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 19, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 25, 2026 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஏப்ரல் 26, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையின் படி 2026, ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கம் வைத்திருந்தால் சிக்கல்?.. நேரடி வரிகள் வாரியம் கூறுவது என்ன?




வங்கிகள் செயல்படாதபோது என்ன செய்ய வேண்டும்?
2026 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் தங்களது வங்கி தேவைகளை இந்த விடுமுறைகளை மையப்படுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, இந்த விடுமுறை நாட்களில் எப்போது போல ஏடிஎம் (ATM – Automated Teller Machine), ஆன்லைன் பேங்கிங் (Online Banking), யுபிஐ (UPI – Unified Payment Interface) ஆகிய சேவைகள் பயன்பாட்டில் இருக்கும் என்றும் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி தங்களது வங்கி தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளலாம் என்பது குறிப்பிட்டத்தக்கது.