இயக்குநரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்ட சுப்ரமணியபுரம் நடிகை சுவாதி ரெட்டி – வைரலாகும் போட்டோஸ்
Actress Swathi Reddy | தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை சுவாதி ரெட்டி. இவரது படங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகி வைரலான நிலையில் தற்போது அவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 2005-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான டேஞ்சர் என்ற படத்தின் மூலம் நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கினார் நடிகை சுவாதி ரெட்டி. இவர் தெலுங்கு சினிமாவில் நடிகையாக நடிக்கத் தொடங்கிய நிலையில் அதனைத் தொடர்ந்து மற்ற தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளிலும் அடுத்தடுத்தப் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வந்த நடிகை சுவாதி ரெட்டி அதிக அளவில் தெலுங்கு மொழியிலேயே நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகை சுவாதி ரெட்டி தமிழ் சினிமாவில் கடந்த 2008-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான சுப்ரமணியபுரம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகை சுவாதி ரெட்டி நடிப்பில் அடுத்தடுத்து கனிமொழி, போராளி, இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வடகரி, யட்சன், யாக்கை மற்றும் திரி ஆகியப் படங்களில் நடித்து உள்ளார். தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை சுவாதி ரெட்டி தற்போது இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




இயக்குநரை 2-வது திருமணம் செய்துக்கொண்ட நடிகை சுவாதி ரெட்டி
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை சுவாதி ரெட்டி முன்னதாக கடந்த 2018-ம் ஆண்டு விமானி விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அது கடந்த 2022-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நடிகை சுவாதி ரெட்டி தற்போது இயக்குநர் ஸ்ரீகாந்த் நாகோதி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார். இவர் நடிகை சுவாதி ரெட்டி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான மந்த ஆஃப் மது என்ற படத்தினை எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நெறுங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைப்பெற்றது குறிப்பிடத்தக்கது.
Also Read… 20 ஆண்டுகளைக் கடந்தது இம்சை அரசன் 23-ம் புலிகேசி… இயக்குநர் வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Actress Colors #Swathi has married ‘Month of Madhu’ director Srikanth Nagothi. pic.twitter.com/OiJ8xNnOOH
— Matters Of Movies (@MattersOfMovies) July 8, 2026
Also Read… சூர்யா பிறந்த நாள் ஸ்பெஷலாக ஒரு அப்டேட் கொடுக்கும் சூர்யா 47 படக்குழு?