Mamitha Baiju: சோஷியல் மீடியாவிலிருந்து ஸ்மால் பிரேக் எடுப்பதாக அறிவித்த மமிதா பைஜூ!
Mamitha Baiju Quits Social Media Temporarily: தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக தொடர்ந்து சினிமாவில் நடித்துவருபவர் மமிதா பைஜூ. இவர் தளபதி விஜய் முதல் சூர்யா போன்ற பல்வேறு உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்நிலையில் திடீரென விலகுவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மலையாளம் சினிமாவில் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது தென்னிந்திய சினிமாவில் இளம் கதாநாயகியாக கொடிகட்டி பார்ப்பவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தற்போது தமிழில் தொடர்ந்து புது புது படங்களில் நடித்துவருகிறார். மலையாள நாயகியாக இவருக்கு தமிழில் அறிமுக படமாக அமைந்தது டியூட் (Dude). இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan) ஜோடியாக நடித்திருந்த நிலையில், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த படத்திற்கு பின் ஜன நாயகன்(Jana Nayagan) திரைப்படத்தில், தளபதி விஜய்யின் வளர்ப்பு மகளாக நடித்துள்ளார். ஆனால் இன்னும் இப்படமானது வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது நடிகை மமிதா பைஜூ, பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பில் உருவாக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக PRS1 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் மமிதா பைஜூ முன்னணி கதாநாயகியாக நடிக்க, அவருடன் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவும் இணைந்து நடிக்கிறார்.
மேலும் இப்படத்தை கிட்டத்தட்ட 6 இயக்குநர்கள் இணைந்து இயக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விதத்தில் தற்போது சமூக ஊடகங்களிலிருந்து விலகவுள்ளதாக திடீர் அறிவிப்பை நடிகை மமிதா பைஜூ வெளியிட்டுள்ளார். இது அவரின் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




இதையும் படிங்க: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தில் சூர்யாவுக்கு ஸ்டைலான தோற்றம் இருக்கும் – தயாரிப்பாளர் நாக வம்சி பேச்சு!
சமூக ஊடகங்களிலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை மமிதா பைஜூ :
நடிகை மமிதா பைஜூ, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், எனது சமூக ஊடகங்கள் அனைத்திலிருந்தும் சிறிது காலம் விளக்கியிருக்கிறேன். இதற்கிடையே, அதை எனது குழுவினர்கள் பார்த்துக்கொள்வார்கள் என அதில் அவர் அறிவித்துள்ளார். தற்போது இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
சோஷியல் மீடியாவிலிருந்து விலகுவதாக மமிதா பைஜூ அறிவித்தது குறித்து வைரலாகும் பதிவு:
Mamitha Baiju is taking a break from social media for a while 😴❤️#mamithabaiju #mamitha pic.twitter.com/0leukskqgo
— mamithafandom (@mamithafandom) July 7, 2026
நடிகை மமிதா பைஜூ, தொடர்ந்து தனது நடிப்பின் மூலமாக ரசிகர்களை கவர்ந்துவருகிறார். தற்போது இவர் பிரதீப் ரங்கநாதனின் தயாரிப்பில் புது படம் ஒன்றில் நாயகியாக நடிக்கிறார். இதற்கிடையே, ஐவரும் பிரதீப் ரங்கநாதனுக்கு திருமணம் செய்யவுள்ளதாகவும் இணையத்தில் பல வதந்திகள் பரவிவருகிறது.
இதையும் படிங்க: அஞ்சான் படத்தைக் குறை கூறவே பலர் காத்திருந்தனர் – இயக்குநர் லிங்குசாமி
இதன் காரணமாக மமிதா பைஜூ ஊடகங்களிலிருந்து விலகியிருக்கலாம்? என கூறப்படுகிறது. சமீபகாலமாக பல நடிகைகள் இதுபோல சோஷியல் மீடியாக்களிலிருந்து விலகிவருவது வழக்கமாகிவிட்டது. இறுதியாக கயாடு லோஹர் விலகியதாக அறிவித்த நிலையில், தற்போது மமிதா பைஜூவும் விலகுவதாக அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.